மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்க மறியல்

🕔 June 20, 2023

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம – ஜுன் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் இவரைக் கைது செய்து – கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்த போதே அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

நபரொருவருக்கு வீடொன்றை வழங்குவதாக உறுதியளித்து 07 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொண்டு ஏமாற்றினார் எனும் குற்றச்சாட்டில் மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டத்தின் போது, இவர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சிக்கி – தாக்குதலுக்குள்ளானமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்