கைது செய்யப்படுகிறார் தம்மாலோக தேரர்; சட்டமா அதிபர் அனுமதி, புலனாய்வு பிரிவினரும் தயார்

கைது செய்யப்படுகிறார் தம்மாலோக தேரர்; சட்டமா அதிபர் அனுமதி, புலனாய்வு பிரிவினரும் தயார் 0

🕔21.Feb 2016

உடுவே தம்மாலோக தேரரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முறையான ஆவணங்கள் எவையும் இன்றி, யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்படவுள்ளார். வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பியதை அடுத்த், இந்தக் கைது நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

மேலும்...
யோசித அடைக்கப்பட்டிருக்கும் சிறைப் பிரிவு, யாரும் உள்நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனம்

யோசித அடைக்கப்பட்டிருக்கும் சிறைப் பிரிவு, யாரும் உள்நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனம் 0

🕔21.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவானது, யாரும் நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மேற்படி நபர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள  பிரிவுக்கு விசேட சிறை அதிகாரிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்படி விசேட சிறை அதிகாரிகள் இருவரும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை முழு நேரமும்

மேலும்...
தாயகம் திரும்பினார் ஜனாதிபதி

தாயகம் திரும்பினார் ஜனாதிபதி 0

🕔21.Feb 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாடு திரும்பினார். ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை தனது குழுவினருடன் ஜனாதிபதி மேற்கொண்டிருந்தார். இலங்கையிலிருந்து கடந்த 15 ஆம் திகதி ஜேர்மனுக்கு மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அங்கிருந்து 19 ஆம் திகதி ஒஸ்ரினா பயணமானார். ஜனாதிபதியுடன் அமைச்சர்களான

மேலும்...
ஹம்பாந்தோட்டையில் சீனா 1000 ஏக்கர் காணிகளைக் கோருவதாக பிரதமர் தெரிவிப்பு

ஹம்பாந்தோட்டையில் சீனா 1000 ஏக்கர் காணிகளைக் கோருவதாக பிரதமர் தெரிவிப்பு 0

🕔21.Feb 2016

முலீட்டு வலயம் ஒன்றினை அமைக்கும் பொருட்டு, ஹம்பாந்தோட்டையில் 1000 ஏக்கர் காணிகளை சீனா கோரியுள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, அதிகமான சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு வந்தாகவும் அவர் கூறினார். கப்பல்களை நிர்மாணிக்கும் திட்டமொன்றினை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிப்பதற்கு சீன நிறுவனமொன்று ஆர்வமாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள காணிகள்,

மேலும்...
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா, இல்லையா; பிரித்தானியாவில் வாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா, இல்லையா; பிரித்தானியாவில் வாக்கெடுப்பு 0

🕔21.Feb 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருப்பது குறித்து எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி, அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தீர்மானிக்கப்படும்  என்று, பிருத்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் பிரித்தானியா ஒரு அங்கத்துவ நாடாக இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும், விலக வேண்டுமென இன்னுமொரு சாராரும் பிரித்தானிய அமைச்சரவைக்குள்ளேயே வாதிட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘உள்ளே –

மேலும்...
தீ விபத்தில் சிக்கி, வர்த்தகர் பலி

தீ விபத்தில் சிக்கி, வர்த்தகர் பலி 0

🕔20.Feb 2016

– க. கிஷாந்தன் – வெலிமடை பொலிஸ் பிரிவில் பெலுங்கல பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். வர்த்த நிலையத்தின் உரிமையாளரே தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெலுங்கல பொரகஸ் பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான கருணாவந்த முதியன்சலாகே பிரேமரத்ன என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும்...
வெலிக்கடை சிறைக் கைதிகளுக்கு, கைத் தொலைபேசி விநியோகித்த ஆசாமி சிக்கினார்

வெலிக்கடை சிறைக் கைதிகளுக்கு, கைத் தொலைபேசி விநியோகித்த ஆசாமி சிக்கினார் 0

🕔20.Feb 2016

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைத்தொலைபேசிகளைக் கடத்திச்சென்று கைதிகளுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சிறைக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேற்படி நபர் இவ்வாறு 53 கைத்தொலைபேசிகளைக் கடத்தியுள்ளார் என்று தெரியவருகிறது.வெலிக்கடை சிறையிலுள்ள பாதாள உலக நபரான ‘தெமட்டகொட சமிந்த’ என்பவரின் பெயரைப் பயன்படுத்தி, மேற்படி சிறைக் காவலர் பலரிடம் கப்பம் வசூலித்துள்ளார் என்றும், அந்தப் பணத்திலேயே கைத்தொலைபேசிகளை வாங்கி வெலிக்கடை சிறைக்

மேலும்...
சரணடைந்த நான்கு பௌத்த பிக்குகள் நீதிமன்றில் ஆஜர்

சரணடைந்த நான்கு பௌத்த பிக்குகள் நீதிமன்றில் ஆஜர் 0

🕔20.Feb 2016

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மேலும் நான்கு பௌத்த பிக்குகள் நேற்றைய தினம் பொலிஸில் சரணடைந்தமையினை அடுத்து, அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுகின்றனர். மேற்படி நான்கு பௌத்த பிக்குகளும் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸில் சரணைடந்தனர். ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டுக்குள்ளான 06 பிக்குகள்

மேலும்...
ஆர்ப்பாட்டம் நடத்திய விமலுக்கு, நீதிமன்றம் அழைப்பாணை

ஆர்ப்பாட்டம் நடத்திய விமலுக்கு, நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔19.Feb 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவையும் மற்றும் ஏழு பேரையும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுவதற்கான உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்தார். இம்மாதம் 06 ஆம் திகதி பௌத்தாலோக மாவத்தை மற்றும் ஹாவ்லொக் வீதியில் ஆர்பாட்டம் செய்து தடையினை ஏற்படுத்தியதாக விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் மீது குற்றம்

மேலும்...
யோசிதவின் சிறை அறைக்கு அருகில், தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் கருவி பொருத்த நடவடிக்கை

யோசிதவின் சிறை அறைக்கு அருகில், தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் கருவி பொருத்த நடவடிக்கை 0

🕔19.Feb 2016

யோசித ராஜபக்ஷ சிறைவைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அருகில், கைத் தொலைபேசிகளுக்கான சமிக்ஞைகளை முடக்கும் கருவிகளை பொருத்தும் நடவடிக்கைகளில் சிறைச்சாலை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் யோசித ராஜபக்ஷ விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கைத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கைத் தொலைபேசிகளைப் பயன்படுத்த முடியாதபடி அவற்றின் சமிக்ஞைகளை முடிக்கும் கருவிகளை யோசிதவின்

மேலும்...
இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு; கண்டி நகரில் பதட்டம்

இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு; கண்டி நகரில் பதட்டம் 0

🕔19.Feb 2016

கண்டி தலதா மாளிகைக்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை இரண்டு குழுக்கள் கைகலப்பில் ஈடுபட்டதால், அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலதா மாளிகைக்கு முன்னாலுள்ள கண்டி – மஹியங்கனை வீதியினை மீளவும் திறக்குமாறு ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயினும், இந்த வீதியினைத் திறக்கக் கூடாது என்று இன்னுமொரு குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த நிலையில்

மேலும்...
கண்டி மஹியாவையில், குடிசைகளுக்குப் பதில் தொடர்மாடி வீடுகள் அமைக்கப்படும்: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

கண்டி மஹியாவையில், குடிசைகளுக்குப் பதில் தொடர்மாடி வீடுகள் அமைக்கப்படும்: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔19.Feb 2016

– ஷபீக் ஹுஸைன் – கண்டி, மஹியாவை பிரதேச மக்கள் வாழும் குடிசை வீடுகளுக்குப் பதிலாக, நவீன வசதிகளுடன் கூடிய தொடர்மாடி வீடுகளை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். ஜெய்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன், கண்டி நகர கழிவு நீர்

மேலும்...
வட மாகாண ஆளுநர், கடமையினைப் பொறுப்பேற்றார்

வட மாகாண ஆளுநர், கடமையினைப் பொறுப்பேற்றார் 0

🕔19.Feb 2016

வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே, தனது கடமையினை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்திலுள்ள வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில், கடமையினைப் பொறுப்பேற்கும் மேற்படி நிகழ்வு, மத அனுஷ்டானங்களுடன் இடம்பெற்றது.முன்னைய ஆளுநர் பளிஹகார ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில், ரெஜினால்ட் குரேயை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநராக நியமித்தார்.இந் நிகழ்வில் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,

மேலும்...
மாலக சில்வா, இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்குச் செல்வதற்கான தடை நீடிப்பு

மாலக சில்வா, இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்குச் செல்வதற்கான தடை நீடிப்பு 0

🕔19.Feb 2016

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா – இரவு நேரக்  களியாட்ட விடுதிகளுக்கு (Night clubs) செல்ல, நீதிமன்றம் விதித்திருந்த தடை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், நேற்று வியாழக்கிழமை இந்த உத்தரவினைப் பிறப்பித்தார். இரவு நேரக் களியாட்ட விடுதியொன்றில், வெளிநாட்டுத் தம்பதியினரை மாலக

மேலும்...
முன்னாள் நீதியரசர் ஷிராணி, மோசடி வழக்கிலிருந்து விடுதலை

முன்னாள் நீதியரசர் ஷிராணி, மோசடி வழக்கிலிருந்து விடுதலை 0

🕔19.Feb 2016

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வெளிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இந்த வழக்கினைத் தாக்கல் செய்திருந்தது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை, குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முன்னாள் பிரதம நீதியரசரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்