யோசித அடைக்கப்பட்டிருக்கும் சிறைப் பிரிவு, யாரும் உள்நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனம்

🕔 February 21, 2016

Yositha - 086

ஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவானது, யாரும் நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி நபர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள  பிரிவுக்கு விசேட சிறை அதிகாரிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி விசேட சிறை அதிகாரிகள் இருவரும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை முழு நேரமும் காண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசேட சிறை  அதிகாரிகளின் அனுமதியின்றி, குறித்த பகுதிக்குள் யாரும் உள் நுளையவோ அல்லது அங்கிருந்து வெளியே செல்வதற்கோ அனுமதியில்லை என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, யோசித ராஜபக்ஷவைச் சந்திப்பதற்கு யாரும் வரும்போது, அவ்வேளையில் மேற்படி விசேட சிறைக் அதிகாரிகளில் ஒருவர் உடனிருப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Comments