இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு; கண்டி நகரில் பதட்டம்

🕔 February 19, 2016

Protest - Kandy - 032
ண்டி தலதா மாளிகைக்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை இரண்டு குழுக்கள் கைகலப்பில் ஈடுபட்டதால், அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தலதா மாளிகைக்கு முன்னாலுள்ள கண்டி – மஹியங்கனை வீதியினை மீளவும் திறக்குமாறு ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயினும், இந்த வீதியினைத் திறக்கக் கூடாது என்று இன்னுமொரு குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிலையில் மேற்படி இரண்டு குழுவினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதால், அங்கு பதட்டமான சூழ்நிலையொன்று உருவாகியது.

இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்து விட்டனர்.

சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனத் தெரியவருகிறது.

பிரச்சினைக்குரிய வீதியானது, தலதா மாளிகை மீது புலிகள் தாக்குதல் நடத்தியமையினை அடுத்து, மூடப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்