ஆர்ப்பாட்டம் நடத்திய விமலுக்கு, நீதிமன்றம் அழைப்பாணை
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவையும் மற்றும் ஏழு பேரையும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுவதற்கான உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்தார்.
இம்மாதம் 06 ஆம் திகதி பௌத்தாலோக மாவத்தை மற்றும் ஹாவ்லொக் வீதியில் ஆர்பாட்டம் செய்து தடையினை ஏற்படுத்தியதாக விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தும்முல்ல சந்தியில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐ.நா. சபையின் அலுகத்தின் முன்னால், விமல் வீரவன்ச உள்ளிட்ட ஒரு கூட்டத்தினர், இம்மாதம் 06 ஆம் திகதி ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கைக்கான விஜயத்தினைக் கண்டித்து, இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.