முன்னாள் நீதியரசர் ஷிராணி, மோசடி வழக்கிலிருந்து விடுதலை

🕔 February 19, 2016
Shirani Bandaranayake - 01முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வெளிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இந்த வழக்கினைத் தாக்கல் செய்திருந்தது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை, குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முன்னாள் பிரதம நீதியரசரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு பிதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய தெரிவித்தார்.

இந்த வழங்கினை தொடர்ந்தும் கொண்டு செல்ல முடியாதென, நீதிமன்றுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்ததையடுத்தே, முன்னாள் நீதியரசரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிவான் அறிவித்தார்.

இதேவேளை, வெளிநாடுகளுக்கு செல்ல ஷராணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தடை உத்தரவும் விலக்கப்பட்டுள்ளது.

மேலும்டு, நீதிமன்ற கண்காணிப்பில் இருந்த ஷிராணியின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்குவதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னைய ஆட்சியாளர்கள், அரசியல் பழிவாங்கலின் பொருட்டு ஷிராணிக்கு எதிராக இந்த வழங்கினைத் தொடுத்திருந்தனர் என்று விமர்சனங்கள் எழுந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்