தீ விபத்தில் சிக்கி, வர்த்தகர் பலி

🕔 February 20, 2016

Fire Accident - 0867
– க. கிஷாந்தன் –

வெலிமடை பொலிஸ் பிரிவில் பெலுங்கல பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வர்த்த நிலையத்தின் உரிமையாளரே தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெலுங்கல பொரகஸ் பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான கருணாவந்த முதியன்சலாகே பிரேமரத்ன என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வெலிமடை நீதவான் மரண விசாரணைகளை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைகளை பதுளை சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்டுள்ளார்.

தீக்காயங்களினால் இந்த மரணம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்