சரணடைந்த நான்கு பௌத்த பிக்குகள் நீதிமன்றில் ஆஜர்

🕔 February 20, 2016

Monks - 01112
ஹோ
மாகம நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மேலும் நான்கு பௌத்த பிக்குகள் நேற்றைய தினம் பொலிஸில் சரணடைந்தமையினை அடுத்து, அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுகின்றனர்.

மேற்படி நான்கு பௌத்த பிக்குகளும் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸில் சரணைடந்தனர்.

ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டுக்குள்ளான 06 பிக்குகள் உள்ளிட்ட பலர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை விளக்க மறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி, நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இந்த நிலையில், மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யுமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்