வட மாகாண ஆளுநர், கடமையினைப் பொறுப்பேற்றார்

🕔 February 19, 2016
Reginald Cooray - 096
டக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே, தனது கடமையினை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்திலுள்ள வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில், கடமையினைப் பொறுப்பேற்கும் மேற்படி நிகழ்வு, மத அனுஷ்டானங்களுடன் இடம்பெற்றது.

முன்னைய ஆளுநர் பளிஹகார ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில், ரெஜினால்ட் குரேயை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநராக நியமித்தார்.

இந் நிகழ்வில் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஓர் ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த ரெஜினோல்ட் குரே, மாகாணசபை உறுப்பினர், மேல் மாகாண முதலமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகித்திருந்தார்.

மட்டுமன்றி, மத்திய அரசாங்கத்திலும் இவர் அமைச்சராக இருந்தார்.

1947 ஆம் ஆண்டு பிறந்த ரெஜினோல்ட் குரே, தனது அரசியலை ஜே.வி.பி. எனும் மக்கள் விடுதலை முன்ணியினூடாக ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Reginald Cooray - 095

Comments