ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா, இல்லையா; பிரித்தானியாவில் வாக்கெடுப்பு

🕔 February 21, 2016

EU - 0975ரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருப்பது குறித்து எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி, அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தீர்மானிக்கப்படும்  என்று, பிருத்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் பிரித்தானியா ஒரு அங்கத்துவ நாடாக இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும், விலக வேண்டுமென இன்னுமொரு சாராரும் பிரித்தானிய அமைச்சரவைக்குள்ளேயே வாதிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ‘உள்ளே – வெளியே’ எனும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு, இன்னும் நான்கு மாதங்களில் நடைபெறும் என, பிரதமர் டேவிட் கெமரூன் நேற்று சனிக்கிழமை அறிவித்தார்.

இதேவேளை, மறுசீரமைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதை ஆதரித்து, தாம் பிராச்சாரம் செய்யவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருக்க வேண்டும் என பிரதமர் கெமரூன் கருத்து தெரிவித்தாலும், அதற்கு அமைச்சரவையில் பலர் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என மூத்த அமைச்சர்கள் சிலர் வாதிட்டு வருகின்றனர். அந்த முடிவினை முன்வைத்து தாங்கள் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்