Back to homepage

மேல் மாகாணம்

அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக, ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த தெரிவிப்பு

அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக, ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த தெரிவிப்பு 0

🕔26.Aug 2015

அரசியலிலிருந்து எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள், தான் – ஒதுங்கிக் கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடயம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தன்னுடைய இரு சகோதரிகளின் ஆலோசனையின் பிரகாரமே இந்த முடிவினை, தான் எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரியிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். மூன்று தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்...
தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு, டக்ளஸ் விருப்பம்

தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு, டக்ளஸ் விருப்பம் 0

🕔26.Aug 2015

ஈ.பி.டி.பி. எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது, தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கான விருப்பத்தினைத் தெரிவித்துள்ளது. ஈ.பி.டி.பி.யின்  தலைவர் டக்ளஸ் தேவனந்தா – அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்து, தேசிய அரசாங்கத்தில் தமது கட்சி இணைந்து செயற்படும் விருப்பத்துடன் உள்ளமையினை வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியை டக்ளஸ் தேவானந்தா சந்தித்தமையினை, தேவானந்தாவின் ஊடக செயலாளர்

மேலும்...
தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக, ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு

தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக, ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு 0

🕔25.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் – தேசிய அரசாங்கமொன்றினை அமைப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக, ஐ.தே.கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் இன்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார். அமைச்சுக்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தேசிய அரசாங்கத்தில் இணையவுள்ளவர்களுடன் முரண்பாடுகள் உள்ளன. எனவே, அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில், தேசிய அரசாங்கமொன்றினை

மேலும்...
ஊடகவியலாளர் பிரகீத் தொடர்பிலான விசாரணை குறித்து, ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு திருப்தி தெரிவிப்பு

ஊடகவியலாளர் பிரகீத் தொடர்பிலான விசாரணை குறித்து, ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு திருப்தி தெரிவிப்பு 0

🕔25.Aug 2015

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்து, அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் ‘ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு’ திருப்தி தெரிவித்துள்ளது. அதேவேளை, இவ் விசாரணையின் ஒரு கட்டமாக – நேற்று திங்கட்கிழமை, ராணுவ வீரர்கள் நால்வர் கைது செய்யப்பட்டமையினை உற்சாகப்படுத்துவதாகவும், அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் உறுதிமொழிக்கிணங்க,

மேலும்...
இல்லாத பதவியை, ராஜிநாமா செய்தார் சுசில்

இல்லாத பதவியை, ராஜிநாமா செய்தார் சுசில் 0

🕔25.Aug 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த, இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுசில் பிரேமஜெயந்தவை – ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து, முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 14 ஆம் திகதி நீக்கியிருந்தார். அத்தோடு,  ஐ.ம.சு.முன்னணியின் செயலாளராக சுசில் செயற்படுவதற்கு எதிராக, நீதிமன்ற உத்தரவொன்றும் பெறப்பட்டிருந்தமை நினைவு

மேலும்...
அமைச்சர்களாக மூவர் சத்தியப்பிரமாணம்

அமைச்சர்களாக மூவர் சத்தியப்பிரமாணம் 0

🕔24.Aug 2015

புதிய அரசாங்கத்தில், அமைச்சர்களாக மூவர் இன்று திங்கட்கிழமை சத்திரப்பிரமாணம் செய்து கொண்டனர். மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகவும், நீதியமைச்சராக விஜேதாஸ ராஜபக்ஷவும், புனர்வாழ்வு அமைச்சராக டி.எம். சுவாமிநாததனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

மேலும்...
எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவராகிறார்?

எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவராகிறார்? 0

🕔24.Aug 2015

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக, எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில்,  எஸ்.பி. திஸாநாயக்க போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து, ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலமாக, இவர் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டுள்ளார். இந்த நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.பி. திஸாநாயக்கவை தெரிவு செய்யப்படுவதற்கான அதிக சந்தர்ப்பமுள்ளதாகத் தெரிய வருகிறது. இதேவேளை, ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜெயந்தவின்

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வாக்கு மூலம் வழங்க, கோத்தாபய ராஜபக்ஷ வருகை

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வாக்கு மூலம் வழங்க, கோத்தாபய ராஜபக்ஷ வருகை 0

🕔24.Aug 2015

பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்கென அமைக்கப்பட்ட, விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அலுவலகத்துக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னைநாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் வருகை தந்துள்ளார். அவர், ஆணைக்குழு முன்பாக வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

மேலும்...
தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவது தார்மீகமான செயற்பாடல்ல; கபே தெரிவிப்பு

தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவது தார்மீகமான செயற்பாடல்ல; கபே தெரிவிப்பு 0

🕔23.Aug 2015

பொதுத் தேர்தலில்  தோல்விடைந்தவர்களை தேசியப் பட்டியல் மூலமாக தெரிவு செய்வதென்பது, தார்மீக அடிப்படையிலான நடவடிக்கையல்ல என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேல்தலுக்குக்கான மக்கள் இயக்கம் (கபே தெரிவித்துள்ளது.தேர்தலில்  தோல்வியடைந்த ஒருவரை, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்வது, தேர்தல் சட்டத்தின் படி சரியாயினும்,  தார்மீக அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கையாகும் என்று, ‘கபே’ யின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.ஐ.ம.சு.முன்னணியைச்

மேலும்...
றோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் 31 பேர், புதிய நாடாளுமன்றுக்கு தெரிவு

றோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் 31 பேர், புதிய நாடாளுமன்றுக்கு தெரிவு 0

🕔23.Aug 2015

புதிய நாடாளுமன்றத்துக்கு – கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் 31 பேர் தெரிவாகியுள்ளனர் இவர்களில் 28 பேர் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள். மூவர் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு; தேர்தலில் வெற்றி பெற்று தெரிவானோர் ரணில் விக்கிரமசிங்க (தலைவர் – ஐ.தே.கட்சி) துமிந்த திசாநாயக்க (செயலாளர் – சுதந்திரக்கட்சி) தினேஷ் குணவர்த்தன

மேலும்...
மயில் கட்சிக்குள் வெடித்தது பிளவு; செயலாளரை பதவி நீக்குவதாக றிசாத் பதியுத்தீன் அறிவிப்பு

மயில் கட்சிக்குள் வெடித்தது பிளவு; செயலாளரை பதவி நீக்குவதாக றிசாத் பதியுத்தீன் அறிவிப்பு 0

🕔22.Aug 2015

– முன்ஸிப் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் – அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே, இதனை அவர் கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஐ.தே.கட்சியிடமிருந்து கிடைக்கப்பெறும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பரிமையை, தனக்கு வழங்குமாறு, கட்சித் தலைவர்

மேலும்...
முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிப்பு

முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிப்பு 0

🕔21.Aug 2015

– அஹமட் – முன்னைய நாடாளுமன்றத்தை விடவும், தற்போதைய புதிய நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2010 இல் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தில் 18 ஆக காணப்பட்ட முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம், தற்போது 21 ஆக அதிகரித்துள்ளது. இருந்தபோதும், 2005 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய நாடாளுமன்றில் காணப்படும் முஸ்லிம் உறுப்பினர்களின்

மேலும்...
ஹிஸ்புல்லா: தோற்று வென்றார்

ஹிஸ்புல்லா: தோற்று வென்றார் 0

🕔21.Aug 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் விவரம் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இதற்கிணங்க ஏ.எச்.எம். பௌசி, கலாநிதி சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித்த விஜயமுனி சொய்சா, எஸ்.பீ.திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா

மேலும்...
‘பாய்ந்து விழுந்த’ மஹிந்த, கவனியாமல் சென்ற ரணில்; பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் சுவாரசிய தருணங்கள்

‘பாய்ந்து விழுந்த’ மஹிந்த, கவனியாமல் சென்ற ரணில்; பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் சுவாரசிய தருணங்கள் 0

🕔21.Aug 2015

– முஜீப் இப்றாஹிம் – பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு நிகழ்வு, இன்று காலை சுமார் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. முன்வரிசையில் அமர்ந்திருந்த பிரபலங்களோடு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் வந்தமர்ந்தார். அவருக்கு அருகே ஹேமா பிரேமதாஸ இருந்தார். ஹேமாவுக்கு அடுத்ததாக சரத் பொன்சேகா அமர்ந்திருந்தார். மஹிந்தவை கண்டதும் பொன்சேக்காவின் முகத்தில் கோபம்

மேலும்...
பிரதம மந்திரியாக ரணில் சத்தியப் பிரமாணம்

பிரதம மந்திரியாக ரணில் சத்தியப் பிரமாணம் 0

🕔21.Aug 2015

ரணில் விக்கிரமசிங்க – இன்று வெள்ளிக்கிழமை காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ரணில் விக்கிரமசிங்க, இம்முறையுடன் 04 ஆவது தடவையாக பிரதமர் பதவியினை வகிக்கின்றார். ஏற்கனவே  1993, 1994 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் பிரதமராகப் பதியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்