‘பாய்ந்து விழுந்த’ மஹிந்த, கவனியாமல் சென்ற ரணில்; பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் சுவாரசிய தருணங்கள்

🕔 August 21, 2015

Ranil - oats - 11
– முஜீப் இப்றாஹிம் –

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு நிகழ்வு, இன்று காலை சுமார் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

முன்வரிசையில் அமர்ந்திருந்த பிரபலங்களோடு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் வந்தமர்ந்தார்.

அவருக்கு அருகே ஹேமா பிரேமதாஸ இருந்தார். ஹேமாவுக்கு அடுத்ததாக சரத் பொன்சேகா அமர்ந்திருந்தார்.

மஹிந்தவை கண்டதும் பொன்சேக்காவின் முகத்தில் கோபம் கொப்பளித்ததை காணமுடிந்தது. மஹிந்த பலமுறை அவரோடு பேச்சுக்கொடுக்க முயன்று தோற்றுப்போனார்.

சற்று நேரத்தில் பிரதமர் சபைக்குள் வந்த போது, அனைவரும் எழுந்து நின்றனர் – மஹிந்த உட்பட.

பிரதமர் வருகிற போது, பாய்ந்து விழுந்து அவருக்கு கைலாகு கொடுக்க மஹிந்த முயன்றார். ஆனால், பிரதமர் அதனை கண்டு கொள்ளவில்லை.

பின்னர், பிரதமரின் பாரியார் மஹிந்தவுக்கு அருகே அமர, அவருக்கருகில் பிரதமர் அமர்ந்தார். அப்போது, மீண்டும் மஹிந்த பாய்ந்து விழுந்து கைலாகு கொடுக்க முயன்றார். இம்முறை அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி சபைக்குள் வந்து தனது ஆசனத்தில் அமர்ந்தார்.

பதவியேற்பு நிகழ்ந்தது.

இதற்கிடையில் மரியாதை நிமித்தம் – பல முறை சபையோர் எழுந்தமர்ந்தனர். ஒவ்வொரு முறையும் மஹிந்தவும் எழுந்தமர்ந்தார்.

பிரதமர் பதவியேற்பை தொடர்ந்து, ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திர கட்சி ஆகியவற்றுக்கிடையிலான
தேசிய அரசாங்கத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்தானது.

அதன் பிறகு, ஜனாதிபதி கீழிறங்கி வந்து – முன் வரிசை பிரமுகர்களோடு கைலாகு கொடுத்தார். அவ்வேளை மஹிந்தவையும் கவனித்துக்கொண்டார்.

நிகழ்ச்சி நிறைவில், எல்லோரும் பிரதமரை வாழ்த்தி கைலாகு கொடுத்து வழியனுப்பினர்.

மஹிந்தவை பார்க்க பரிதாபமாக இருந்தது. நிகழ்ச்சி முழுவதும் அடிபட்ட பாம்பு போல, மிகவும் சோர்ந்து போய்  “என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள்” என்ற சரணாகதி நிலையில், அவர் காணப்பட்டார்.

எழுந்து நின்று மரியதை செய்யும் கட்டங்களில், முதல் நபராய் அதனைச்செய்வதில் மிகவும் சிரத்தையோடு மஹிந்த செயற்பட்டதை காணமுடிந்தது.

அந்த காட்சிகள், நிச்சயம் நல்லாட்சியை விரும்பியோர்க்கு கண்குளிர்ச்சியாய் அமைந்திருக்கும்.

வாழ்க்கை ஒரு வட்டம்.

இந்த கனவுகளை நனவாக்கிய – எல்லாம் வல்ல இறைவனை, நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.Ranil - oats - 10Ranil - oats - 09Ranil - oats - 02Ranil - oats - 06Ranil - oats - 12Ranil - oats - 04Ranil - oats - 13Ranil - oats - 05

Comments

புதிது பேஸ்புக் பக்கம்