Back to homepage

மேல் மாகாணம்

இலங்கை வரலாற்றில் அதிகளவு லஞ்சத் தொகை வாங்கிய நபர்கள் கைது

இலங்கை வரலாற்றில் அதிகளவு லஞ்சத் தொகை வாங்கிய நபர்கள் கைது 0

🕔15.Oct 2015

சுங்க அதிகாரிகள் மூவர், பாரிய தொகையொன்றினை லஞ்சமாகப் பெற்றமை தொடர்பில் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 125 மில்லியன் ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளனர் என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இலங்கை வரலாற்றிலேயே அதிகளவாக பெறப்பட்ட லஞ்சத் தொகை இதுவென கூறப்படுகின்றது. சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜினதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக மற்றும்

மேலும்...
நாளை நிறைவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம், டிசம்பர் வரை நீடிப்பு

நாளை நிறைவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம், டிசம்பர் வரை நீடிப்பு 0

🕔15.Oct 2015

நாளை வெள்ளிக்கிழமையுடன் ஆயுட்காலம் நிறைவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலத்தை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.இதேவேளை,  இந்த மாதம் 31ஆம் திகதியுடன் ஆயுட்காலத்தை நிறைவுசெய்யும் மேலும் இரண்டு உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலமும் டிசம்பர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.அடுத்த வருடம் மார்ச் மாதமளவில், அனைத்து

மேலும்...
முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துயரங்கள் அகல்வதற்கு பிரார்த்திப்போம்; இஸ்லாமிய புது வருட வாழ்த்துச் செய்தியில் மு.கா. தலைவர்

முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துயரங்கள் அகல்வதற்கு பிரார்த்திப்போம்; இஸ்லாமிய புது வருட வாழ்த்துச் செய்தியில் மு.கா. தலைவர் 0

🕔14.Oct 2015

– ஜெம்சாத் இக்பால் –‘இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளை முறியடிப்பதற்கு, நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விடுத்துள்ள முஹர்ரம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் சகல இனத்தவர்கள் மத்தியிலும் நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவ எல்லாம் வல்ல

மேலும்...
வெலே சுதாவுக்கு மரண தண்டனை

வெலே சுதாவுக்கு மரண தண்டனை 0

🕔14.Oct 2015

போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதா என அழைக்கப்படும் கம்பொள விதானகே சமந்த குமாரவுக்கு இன்று புதன்கிழமை காலை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரீதி பத்மன் சூரசேன இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.கல்கிஸ்ஸை பிரதேசத்தில் 2008 ஆம் ஆண்டு, 7.05 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை, தன்வசம் வைத்திருந்தார் எனும்

மேலும்...
அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு 0

🕔13.Oct 2015

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கிலிடும் ‘அலுகோசு’ பதவிக்கான நேர்முகத் தேர்வு, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. குறித்த நேர்முகத் தேர்வானது அரச பரிபாலன திணைக்களத்தினதும் சிறைச்சாலைகள் புனர்நிர்மாண திணைக்களத்தினதும் உயரதிகாரிகள் இருவரால் நடத்தப்படுவதாகவும், பரீட்சார்த்திகள் மனநல மருத்துவரின் சான்றிதழுடன் சமூகமளிக்க வேண்டுமெனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இப்பதவிக்கென இரண்டு பெண்கள் அடங்கலாக மொத்தம் 24

மேலும்...
பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஞானசார தேரர் நீதிமன்றில் சரண்

பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஞானசார தேரர் நீதிமன்றில் சரண் 0

🕔13.Oct 2015

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை சரணடைந்துள்ளார். நேற்றைய தினம் இவர் நீதிமன்றில் ஆஜராக தவறியதையடுத்து, அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய தினம் சட்டத்தரணி சகிதம் அவர் நீதிமன்றில் சரணடைந்தார். கொழும்பில் நேற்று விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட வாகன

மேலும்...
வெள்ளை வான் கடத்தல்; அம்பலமாகும் உண்மைகள்

வெள்ளை வான் கடத்தல்; அம்பலமாகும் உண்மைகள் 0

🕔13.Oct 2015

முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் இயக்கப்பட்ட வெள்ளை வான் கடத்தலுக்காக, 03 குழுக்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக, ஊடகங்கள் கூறுகின்றன.இந்த மூன்று குழுக்களில் முதல் குழுவானது, கடத்தி செல்லப்படும் நபர் தொடர்பில் தகவல் சேகரித்தல் மற்றும் புலனாய்வு செய்து கடத்தி செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டன.அதற்காக, பாதுகாப்பு புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் மற்றும் விடுதலை புலிகளில் இருந்து வெளியேறிய

மேலும்...
புதிய முறைமையின் அடிப்படையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்

புதிய முறைமையின் அடிப்படையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 0

🕔12.Oct 2015

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், புதிய முறைமையின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. 70 வீதம் வட்டார அடிப்படையிலும் 30 வீதம் விகிதாசர அடிப்படையிலும் இந்தத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.அடுத்த வருடம் மார்ச் மாதம் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே,

மேலும்...
பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை

பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை 0

🕔12.Oct 2015

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக, நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு பிள்ளையான் அழைக்கப்பட்டிருந்தார். இதற்கமைய, நேற்று மாலை 05 மணியளவில்

மேலும்...
வாக்குமூலம் வழங்கச் சென்ற பிள்ளையான் கைது

வாக்குமூலம் வழங்கச் சென்ற பிள்ளையான் கைது 0

🕔11.Oct 2015

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பிள்ளையான் அழைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக,

மேலும்...
நீதிபதிகளின் சம்பளம் ஐந்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு; நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அடிக்கிறது அதிஷ்டம்

நீதிபதிகளின் சம்பளம் ஐந்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு; நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அடிக்கிறது அதிஷ்டம் 0

🕔10.Oct 2015

நீதிபதிகளின் சம்பளத்தை ஒரு லட்சம் ரூபாவிலிருந்து, ஐந்து லட்சமாக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளரும், பிரதியமைச்சருமான எரான் விக்கிரமரத்ன, இது தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றையும் முன்மொழிந்துள்ளார். தற்போதைக்கு நீதிபதிகள் சம்பளமாகப் பெறும் ஒரு லட்சம் ரூபாவினை, ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும் என்று அவர் கோரிக்கை

மேலும்...
மஹிந்த ஆட்சிக் காலத்து அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர், எதிர்வரும் வாரம் கைதாகும் சாத்தியம்

மஹிந்த ஆட்சிக் காலத்து அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர், எதிர்வரும் வாரம் கைதாகும் சாத்தியம் 0

🕔10.Oct 2015

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளோடு தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த சுமார் 20 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் வாரத்தினுள் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் – கொலை, போதைபொருள், எத்தனோல் வியாபாரம், உர மானியம் சுரண்டல், விவசாயிகளின் நஷ்டஈடு பணத்தை சுரண்டல், அரசாங்க நிதியை சுரண்டிய குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. மேற்படி

மேலும்...
மஹிந்த ஆட்சியில் திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள், கடலுக்கடியில் உள்ளதாக சந்தேகம்

மஹிந்த ஆட்சியில் திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள், கடலுக்கடியில் உள்ளதாக சந்தேகம் 0

🕔8.Oct 2015

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இறுதி காலப் பகுதியில், பணம் மற்றும் நகைகள் நிரப்பப்பட்ட சுமார் 11 கொள்கலன்கள் கடலுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று, லஞ்ச ஊழல் தொடர்பில் ஆராய்ந்த குழு சந்தேகிக்கிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து, இது தொடர்பில் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ராஜபக்ச ஆட்சியாளர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் பணத்திற்கு

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் – சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் சந்திப்பு

அமைச்சர் ஹக்கீம் – சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் சந்திப்பு 0

🕔7.Oct 2015

இலங்கைக்கான சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் எஸ். சந்தரதாஸ் அவரது குழுவினருடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீமை நேற்று செவ்வாய்கிழமை சந்தித்தார். இச் சந்திப்பு, நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. முக்கியமாக நகரத் திட்டமிடல்,

மேலும்...
தாஜுடீனின் கைத்தொலைபேசி நினைவகத்திலுள்ள தகவல்கள் மீட்பு

தாஜுடீனின் கைத்தொலைபேசி நினைவகத்திலுள்ள தகவல்கள் மீட்பு 0

🕔6.Oct 2015

ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கைத் தொலைபேசியின் நினைவகத்திலுள்ள (Memory)  தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தாஜூடீனின் கைத்தொலைபேசி, மீளப் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்துள்ள போதிலும், அதன்  நினைவகப் பகுதியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு, ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.கைத்தொலைபேசியின் நினைவகத்திலிருந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்