நீதிபதிகளின் சம்பளம் ஐந்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு; நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அடிக்கிறது அதிஷ்டம்

🕔 October 10, 2015
Salary - 01நீதிபதிகளின் சம்பளத்தை ஒரு லட்சம் ரூபாவிலிருந்து, ஐந்து லட்சமாக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளரும், பிரதியமைச்சருமான எரான் விக்கிரமரத்ன, இது தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றையும் முன்மொழிந்துள்ளார்.

தற்போதைக்கு நீதிபதிகள் சம்பளமாகப் பெறும் ஒரு லட்சம் ரூபாவினை, ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையானது,  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பு விதிகளின் பிரகாரம் நீதிபதிகளின் சம்பளம் அதிகரிக்கப்படும் போது, அதற்கு இணையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படல் வேண்டும்.

எனவே, நீதிபதிகளுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் பட்சத்தில் தமக்கும் சம்பளம் அதிகரிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பெரும்பாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை நேரடியாக அதிகரிப்பதற்குப் பதிலாக, அனைத்து அரசாங்கங்களும் முதலில் நீதிபதிகளின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கரிசனை செலுத்துவது வழமையாகும்.

Comments