புதிய முறைமையின் அடிப்படையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்

🕔 October 12, 2015
Postal votes - 01ள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், புதிய முறைமையின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

70 வீதம் வட்டார அடிப்படையிலும் 30 வீதம் விகிதாசர அடிப்படையிலும் இந்தத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் மார்ச் மாதம் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், அடுத்த ஆண்டு நடத்தப்படுமென, முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்