அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

🕔 October 13, 2015

Hangmen - 01ரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கிலிடும் ‘அலுகோசு’ பதவிக்கான நேர்முகத் தேர்வு, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

குறித்த நேர்முகத் தேர்வானது அரச பரிபாலன திணைக்களத்தினதும் சிறைச்சாலைகள் புனர்நிர்மாண திணைக்களத்தினதும் உயரதிகாரிகள் இருவரால் நடத்தப்படுவதாகவும், பரீட்சார்த்திகள் மனநல மருத்துவரின் சான்றிதழுடன் சமூகமளிக்க வேண்டுமெனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இப்பதவிக்கென இரண்டு பெண்கள் அடங்கலாக மொத்தம் 24 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். ஆயினும், இந்தப் பதவிக்கு பெண்கள் பொருத்தமானவர்களில்லை என்ற காரணத்தினால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த பதவிகளுக்கான வெற்றிடங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் நிரப்பப்படவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்