அமைச்சர் ஹக்கீம் – சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் சந்திப்பு

🕔 October 7, 2015

Hakeem - 0126
லங்கைக்கான சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் எஸ். சந்தரதாஸ் அவரது குழுவினருடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீமை நேற்று செவ்வாய்கிழமை சந்தித்தார்.

இச் சந்திப்பு, நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

முக்கியமாக நகரத் திட்டமிடல், ஈரலிப்பான நிலங்களின் அபிவிருத்தி மற்றும் நீர் முகாமைத்துவம் என்பனவற்றை மையப்படுத்திய விடயங்களுக்கு, இவர்களின் கலந்துரையாடலில் முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இரு தரப்புகளுக்கிடையிலான உறவுகள் குறித்தும் இங்கு பேசப்பட்டது.

இச் சந்திப்பில், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபிஸ் ஆகியோரும் பங்குபற்றினர்.Hakeem - 0125

Comments

புதிது பேஸ்புக் பக்கம்