பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஞானசார தேரர் நீதிமன்றில் சரண்

🕔 October 13, 2015

Gnanasara thero - 01பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை சரணடைந்துள்ளார்.

நேற்றைய தினம் இவர் நீதிமன்றில் ஆஜராக தவறியதையடுத்து, அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய தினம் சட்டத்தரணி சகிதம் அவர் நீதிமன்றில் சரணடைந்தார்.

கொழும்பில் நேற்று விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக, தம்மால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லையென ஞானசாரர், இதன்போது தெரிவித்தார்.

புனித குர்ஆனை அவமதித்தமை மற்றும் ஜாதிக பல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் பதற்றத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகத் தவறியமை காரணமாகவே, அவருக்கு பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்