பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை

🕔 October 12, 2015
Pillaiyan - 002கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக, நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு பிள்ளையான் அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய, நேற்று மாலை 05 மணியளவில் பிள்ளையான் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜரானார். இதனையடுத்து, அவரிடம் வாக்குமூலத்தினைப் பெற்றுகொண்டதன் பின்னர், அவரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரை, தொடர்ந்தும் விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.

இதேவேளை குறித்த கொலை தொடர்பில், பிள்ளையான் தலைமை வகிக்கும் தமிழீழ மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா மற்றும் ரங்கசாமி கனகநாயகம் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி: வாக்குமூலம் வழங்கச் சென்ற பிள்ளையான் கைது

 

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்