ஹிஸ்புல்லா: தோற்று வென்றார்

🕔 August 21, 2015

Hszbullah - 098க்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் விவரம் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இதற்கிணங்க ஏ.எச்.எம். பௌசி, கலாநிதி சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித்த விஜயமுனி சொய்சா, எஸ்.பீ.திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமத்திபால, அங்கஜன் ராமநாதன், எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மலின் ஜயதிலக்க மற்றும்  பைசர் முஸ்தபா ஆகியோர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஹிஸ்புல்லா உட்பட, ஐ.ம.சு.முன்னணி சார்பாக தேர்தலில் தோல்வியடைந்த 07 பேருக்கு, அந்தக் கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.ம.சு.முன்னணிக்கு இம்முறை தேசியப்பட்டியல் மூலம் 12 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்