Back to homepage

மேல் மாகாணம்

நாட்டில் இருந்தால் வருவேன்; மஹிந்த உறுதி

நாட்டில் இருந்தால் வருவேன்; மஹிந்த உறுதி 0

🕔18.Aug 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதயளித்துள்ளார் என்று, தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். மாநாடு நடைபெறும் போது, தான் நாட்டில் இருந்தால் நிச்சயம் கலந்துகொள்வேன் என்று, மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகவும் – அமைச்சர் செனவிரத்ன கூறினார். சுதந்திரக் கட்சியின் வருடாந்த

மேலும்...
‘பட்டை’ வியாபாரத்தில் பொலிஸ் அதிகாரி; மாறுவேடத்தில் சென்றவர்களிடம் மாட்டினார்

‘பட்டை’ வியாபாரத்தில் பொலிஸ் அதிகாரி; மாறுவேடத்தில் சென்றவர்களிடம் மாட்டினார் 0

🕔18.Aug 2016

வல்லப்பட்டையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்த,   பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், மாறுவேடத்தில் சென்ற பொலிஸாருக்கே, வல்லப்பட்டயினை குறித்த பொலிஸ் அதிகாரி விற்பனை செய்ய முயற்சித்துள்ளார். வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாலிந்தநுவர காட்டுப் பகுதியில்

மேலும்...
ராணுவத் தளபதியின் பதவிக் காலம் நீடிப்பு

ராணுவத் தளபதியின் பதவிக் காலம் நீடிப்பு 0

🕔16.Aug 2016

ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பதவிக்காலம் மேலும் ஒருவருட காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ராணுப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயந்த ஜயவீர தெரிவித்துள்ளார். ராணுவத் தளபதியின் பதவிக் காலத்தினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்துள்ளார். இதற்கிணங்க, ராணுவத் தளபதியின் பதவிக்காலம், இம்மாதம் 22ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், நீடிக்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு

மேலும்...
முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம் தொடர்பில், குடும்பத்தாரிடம் விசாரணை

முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம் தொடர்பில், குடும்பத்தாரிடம் விசாரணை 0

🕔16.Aug 2016

முன்னாள் நீதியரசர் சரத் அப்றூவின் மரணம் தொடர்பில் அவரின் குடும்பத்தாரிடம், விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ, அவருடைய வீட்டு மேல் மாடியிலிருந்து, கீழே விழுந்து நேற்று திங்கட்கிழமை காலை உயிரிழந்தார். அப்றூவின் மரணம் தொடர்பில் அவரின் மனைவி மற்றும் மகள்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரேத பரிசோதனைகள் இன்று

மேலும்...
உயர்தரப் பரீட்சை கண்காணிப்பாளர்கள் நால்வருக்கு, ஆயுட்கால தடை

உயர்தரப் பரீட்சை கண்காணிப்பாளர்கள் நால்வருக்கு, ஆயுட்கால தடை 0

🕔16.Aug 2016

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டிருந்த, கண்காணிப்பாளர்கள் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார். இந்த நால்வருக்கும் பரீட்சை மண்டபங்களில் பணி புரிவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கிரிஉல்ல, நுவரெலிய மற்றும் வெலிவேரிய ஆகிய கல்வி வலயங்களில் கடமைகளில் ஈடுபட்ட கண்காணிப்பாளர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைகள்

மேலும்...
தேர்தல்களுக்குத் தயாராகுங்கள்; ஜனாதிபதி அறிவுறுத்தல்

தேர்தல்களுக்குத் தயாராகுங்கள்; ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔15.Aug 2016

மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த வருடம் இடம்பெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே, சுதந்திரக் கட்சியினர் இந்தத் தேர்தல்களை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டுமெனவும், ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சி சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சந்தித்தபோதே, ஜனாதிபதி இவ் விடயத்தினைக் கூறியுள்ளார். உள்ளுராட்சி சபைகளுக்கான

மேலும்...
நாமலுக்கு விளக்க மறியல்; 22 ஆம் திகதி வரை உள்ளே

நாமலுக்கு விளக்க மறியல்; 22 ஆம் திகதி வரை உள்ளே 0

🕔15.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்வை, நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது. எதிர்வரும் 22 ஆம் திகதி வரை, நாமலை விளக்க மறியலில் வைக்குமாறு இதன் போது நீதவான் உத்தரவிட்டார்.

மேலும்...
தடுமாறும் மு.கா. தலைவர்; சூடானார் ஹசனலி

தடுமாறும் மு.கா. தலைவர்; சூடானார் ஹசனலி 0

🕔15.Aug 2016

– அஹமட் –  மு.கா. தலைவர் ஹக்கீம் சார்பாக அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஒருவரை தொலைபேசியில் அழைத்து, ஹசனலி சூடாகவும், கடுமையாகவும் பேசியதாகத் தெரியவருகிறது. மு.கா. தலைவருக்கும், செயலாளருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கட்சிக்குள் மூன்று பேரைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது தலைவர் ஹக்கீமுடைய

மேலும்...
நாமல் ராஜபக்ஷ கைது

நாமல் ராஜபக்ஷ கைது 0

🕔15.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்ற விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். கவார்ஸ் கோப்பரேட்டிவ் எனப்படும் தனியார் நிறுவனத்தின் பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாகவே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக,  நிதிக்குற்ற

மேலும்...
பெண் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான, முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம்

பெண் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான, முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம் 0

🕔15.Aug 2016

உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணமடைந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தன்னுடைய வீட்டில் ஏற்பட்ட விபத்தொன்றில் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது களுபோவிலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தனது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக  சரத் அப்றூ மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த

மேலும்...
காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை 0

🕔15.Aug 2016

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை  மாற்றம் ஏற்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று நான்கு நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்கும் எனவும்  திணைக்களம் கூறியுள்ளது. மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடற்கரைப் பிரதேசத்தில் அதிக காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்

மேலும்...
அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை

அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை 0

🕔14.Aug 2016

– க. கிஷாந்தன் – நாட்டின் அடுத்த வரவு செலவு திட்டம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் முன்வைக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, யுத்த காலத்தின் போது நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பில், அமெரிக்கா விசாரணைகளை மேற்கொள்ள – இன்றைய அரசு ஒப்பந்தம் ஒன்றை

மேலும்...
நண்பனிடம் கப்பம் பெற்றதாக யோசித மீது குற்றச்சாட்டு; விசாரணைகள் ஆரம்பம்

நண்பனிடம் கப்பம் பெற்றதாக யோசித மீது குற்றச்சாட்டு; விசாரணைகள் ஆரம்பம் 0

🕔14.Aug 2016

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ மீது, கப்பம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டொன்று சுமத்தப்பட்டு, அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சுரேஸ் எதிரிசிங்க எனும் தனது நண்பர் ஒருவரிடமிருந்தே, யோஷித ராஜபக்ஷ கப்பம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சுரேஸ் எதிரிசிங்கவின் தந்தை, வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகராவார். யோஷித்தவின் நண்பரான

மேலும்...
வாக்காளர் இடாப்பில் பெயரை பதியத் தவறியவர்களுக்கு, மீண்டும் சந்தர்ப்பம்

வாக்காளர் இடாப்பில் பெயரை பதியத் தவறியவர்களுக்கு, மீண்டும் சந்தர்ப்பம் 0

🕔14.Aug 2016

வாக்காளர் இடாப்பில் இவ்வருடம், தமது பெயர்களைச் சேர்த்துக் கொள்ளத் தவறியவர்களுக்கு, மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதிவரை வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும்...
பிரதமர் ரணில், சீனா பறந்தார்

பிரதமர் ரணில், சீனா பறந்தார் 0

🕔13.Aug 2016

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை சீனா பயணமானார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர், இதன்போது, சீன பிரதமர் உட்பட, பல முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது, அங்குள்ள கைத்தொழில் வலயம், தொழில்நுட்ப பூங்கா மற்றும் நிதி கேந்திர நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பார்வையிடவுள்ளார். பிரதமருடன் அவரின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்க,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்