முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம் தொடர்பில், குடும்பத்தாரிடம் விசாரணை

🕔 August 16, 2016

Sarath abrew - 987876முன்னாள் நீதியரசர் சரத் அப்றூவின் மரணம் தொடர்பில் அவரின் குடும்பத்தாரிடம், விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ, அவருடைய வீட்டு மேல் மாடியிலிருந்து, கீழே விழுந்து நேற்று திங்கட்கிழமை காலை உயிரிழந்தார்.

அப்றூவின் மரணம் தொடர்பில் அவரின் மனைவி மற்றும் மகள்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பிரேத பரிசோதனைகள் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் வழக்கு ஒன்றினை எதிர்கொண்ட முன்னாள் நீதியரசர் அப்றூ, பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூ, தானாகவே முன்வந்து 2014ம் ஆண்டு அவரது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்