தேர்தல்களுக்குத் தயாராகுங்கள்; ஜனாதிபதி அறிவுறுத்தல்

🕔 August 15, 2016

Maithripala sirisena - 0987மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த வருடம் இடம்பெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனவே, சுதந்திரக் கட்சியினர் இந்தத் தேர்தல்களை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டுமெனவும், ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சி சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சந்தித்தபோதே, ஜனாதிபதி இவ் விடயத்தினைக் கூறியுள்ளார்.

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த வருட ஆரம்பத்திலும், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் வருடத்தின் நடுப்பகுதியிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனடிப்படையில் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்