பெண் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான, முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம்

🕔 August 15, 2016

Sarath abrew - 06யர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணமடைந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய வீட்டில் ஏற்பட்ட விபத்தொன்றில் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது களுபோவிலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தனது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக  சரத் அப்றூ மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்