நாமல் ராஜபக்ஷ கைது

🕔 August 15, 2016

Namal - 0865நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்ற விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர்.

கவார்ஸ் கோப்பரேட்டிவ் எனப்படும் தனியார் நிறுவனத்தின் பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாகவே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்படி பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக,  நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு சென்றிருந்த வேளையிலேயே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

ரக்பி விளையாட்டின் வளர்ச்சிக்கென இந்தியாவின் கிரிஷ் குழுமத்தாரிடம் பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபா நிதியினை மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, நாமல் ராஜபக்ஷ கடந்த ஜுலை மாதம் 11ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு ஜூலை 18ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, அவர் மீண்டும் கைதாகியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்