நாமலுக்கு விளக்க மறியல்; 22 ஆம் திகதி வரை உள்ளே

🕔 August 15, 2016

Namal Rajapaksa - 0986நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்வை, நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

எதிர்வரும் 22 ஆம் திகதி வரை, நாமலை விளக்க மறியலில் வைக்குமாறு இதன் போது நீதவான் உத்தரவிட்டார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில், நாமல் ராஜபக் மீது நிதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்