உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனுக்களை ரத்துச் செய்ய முடியாது: மஹிந்த தேசப்பிரிய

🕔 May 15, 2024

ள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வது – நடைமுறை சாத்தியம் இல்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னரே உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்துச் செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

தொடர்பான செய்தி: ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களின் நிலை குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்