ராணுவத் தளபதியின் பதவிக் காலம் நீடிப்பு

🕔 August 16, 2016

Krishantha de silva - 046ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பதவிக்காலம் மேலும் ஒருவருட காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ராணுப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

ராணுவத் தளபதியின் பதவிக் காலத்தினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்துள்ளார்.

இதற்கிணங்க, ராணுவத் தளபதியின் பதவிக்காலம், இம்மாதம் 22ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், நீடிக்கப்பட்டுள்ளது.

1980 ஆம் ஆண்டு ராணுவ சேவையில் இணைந்து கொண்ட கிரிஷாந்த டி சில்வா, கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்