Back to homepage

மேல் மாகாணம்

மைத்திரியை சுதந்திரக் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது

மைத்திரியை சுதந்திரக் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது 0

🕔5.Aug 2016

மைத்திரிபால சிறிசேனவை, ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். சனத் நிஷாந்தவை சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதாக, ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் மத்திய குழு, நேற்று வியாழக்கிமை தீர்மானித்தமையினையடுத்து, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதியும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த

மேலும்...
பதிலளிக்காமல் உளறிக் கொண்டிருந்தால், ஆவணங்களை வெளியிடுவேன்: மு.கா. தவிசாளர் பசீர்

பதிலளிக்காமல் உளறிக் கொண்டிருந்தால், ஆவணங்களை வெளியிடுவேன்: மு.கா. தவிசாளர் பசீர் 0

🕔5.Aug 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில், தான் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் தொடர்ந்தும் மேடை உளறல்களைப் பதில்களாக வழங்கிக் கொண்டிருந்தால், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் தன்னிடமுள்ள ஆச்சரியம் தரும் ஆவணங்களை வெளியிடப் போவதாக, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றின் மூலமாக, அவர் இதை கூறியுள்ளார்.

மேலும்...
கடமைக்குத் திரும்பா விட்டால், வேலை கிடையாது: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

கடமைக்குத் திரும்பா விட்டால், வேலை கிடையாது: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔5.Aug 2016

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், தமது பணிப் பகிஷ்கரிப்பினைக் கைவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை முதல், கடமைக்குத் திரும்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கிணங்க கடமைக்குத் சமூகமளிக்காத ஊழியர்கள் தமது பணியிலிருந்து நீங்கியவர்களாகக் கருதப்படுவார்கள் என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா கூறியுள்ளார். இதேவேளை, இவ்வாறான அறிவிப்புக்களால் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தடுக்க முடியாது

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔5.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு நேற்று வியாழக்கிழமை கூடிய போது, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, சுதந்திரக் கட்சியின் கட்சியின் தலைமையை வெளிப்படையாக விமர்சித்து

மேலும்...
நீல் டி அல்விஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்

நீல் டி அல்விஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔4.Aug 2016

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நீல் டி அல்விஸ், இன்று வியாழக்கிழமை, தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வந்த, ஜே.ஜே. ரத்னசிறி – பொது நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றப்பட்டமை காரணமாக, அந்த இடத்துக்கு நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நீல் டி அல்விஸ் – அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருந்தார்.

மேலும்...
ஹசனலியின் அதிகாரங்களை வழங்க ஹக்கீம் இணக்கம்; சந்திக்கவும் ஏற்பாடு: தூது சென்றார் ஹாபிஸ் நசீர்

ஹசனலியின் அதிகாரங்களை வழங்க ஹக்கீம் இணக்கம்; சந்திக்கவும் ஏற்பாடு: தூது சென்றார் ஹாபிஸ் நசீர் 0

🕔4.Aug 2016

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலியிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தினையும் மீளவும் கையளிப்பதற்கு, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இணங்கியுள்ளார் எனத் தெரியவருகிறது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சார்பில், செயலாளர் ஹசனலியை அண்மையில் சந்தித்த கிழக்கு மாகாண முதலமைச்சரும், மு.கா.வின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்,

மேலும்...
மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்

மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர் 0

🕔4.Aug 2016

மஹிந்­த ­ரா­ஜபக்ஷவுக்கும் ரணில் விக்­கி­ர­ம ­சிங்­க­வுக்கும் இடையில் ‘டீல்’ உள்­ளது என்று, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக தெரிவித்தார். தன்மீதான குற்­றச்­சாட்­டுக்­களிலிருந்து, தன்னைக் பாது­காத்­துக்­கொள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில் தேவைப்­ப­டு­கின்றார். அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ கட்சியை இரண்­டாக்கி, குழப்­பத்தை ஏற்­ப­டுத்த ரணி­லுக்கும் மஹிந்த அணி­ தேவைப்ப­டுகிறது என்றும் அனுரகுமார திஸாநாயக கூறினார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைமை அலு­வ­ல­கத்தில்,

மேலும்...
பேச்சுவார்த்தை தோல்வி; தொடர்கிறது பணிப் பகிஸ்கரிப்பு

பேச்சுவார்த்தை தோல்வி; தொடர்கிறது பணிப் பகிஸ்கரிப்பு 0

🕔4.Aug 2016

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும்,  பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும், அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சங்க சம்மேளனத்துக்கும் இடையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, பணிப் பகிஸ்கரிப்பு தொடரும் எனக் கூறப்படுகிறது. பல கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய

மேலும்...
வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; நோயாளிகள் அவதி

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; நோயாளிகள் அவதி 0

🕔3.Aug 2016

– க. கிஷாந்தன் – நுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரப்பத்தனை, லிந்துலை மற்றும் டயகம உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளில் கணிசமான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். மேற்படி வைத்தியசாலைகளுக்கு வருகின்ற நோயாளர்களில் அதிகமானோர் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்தோர் என்பதால், அதிகாலை கிளம்பி வைத்தியசாலைகளுக்கு வருகின்றனர். இந்த நிலையில், பல மணி நேரம் இவர்கள் வைத்திய பரிசோதனைக்காக

மேலும்...
மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைத் தெரியப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைத் தெரியப்படுத்தும் திட்டம் ஆரம்பம் 0

🕔2.Aug 2016

மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவினை தெரியப்படுத்தும் வகையில், அவை அடைக்கப்பட்டுள்ள போத்தல்களின் மூடிகளுக்கு நிறமூட்டும் நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய 1980 ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார

மேலும்...
தகவலறியும் சட்டமூலத்தில், சபாநாயகர் கையெழுத்திட்டார்; ஊடகத்துறை அமைச்சர்

தகவலறியும் சட்டமூலத்தில், சபாநாயகர் கையெழுத்திட்டார்; ஊடகத்துறை அமைச்சர் 0

🕔2.Aug 2016

தகவலறியும் சட்ட மூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார் என நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவைத்  தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், குறித்த சட்ட மூலத்துக்கு என்னானது என, பத்திரிகையாளரொருவர் அமைச்சரிடம் கேட்டபோதே, இந்தத் தகவலை

மேலும்...
பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’

பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’ 0

🕔1.Aug 2016

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ – இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் தம்மிக ஹேமபால உத்தரவிட்டார். திவிநெகும அபிவிருத்தி நிதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில்,

மேலும்...
உடல் எடையைக் குறைக்கலாம், வேறொன்றும் செய்ய முடியாது: ஹிருணிகா கிண்டல்

உடல் எடையைக் குறைக்கலாம், வேறொன்றும் செய்ய முடியாது: ஹிருணிகா கிண்டல் 0

🕔30.Jul 2016

பாத யாத்திரை செல்வதனால்,  உடல் எடையை வேண்டுமானால் குறைக்க முடியும். அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக முன்னெடுத்துவரும் பாதை யாத்திரை தொடர்பிலேயே, மேற்படி கருத்தினை ஹிருணிகா தெரிவித்துள்ளார். ஆட்சியை மாற்றப்போவதாகக் கூறி, கண்டியிலிருந்து கொழும்பை நோக்கி ஆரம்பித்துள்ள பாதயாத்திரையால்,

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது 0

🕔29.Jul 2016

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கொழும்பு குற்றப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். அரசாங்க வாகனத்தினை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த.தே.கூட்டமைப்பில் 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகிய பியசேன, பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி, அந்த ஆட்சியில்

மேலும்...
ஊடகவியலாளரை தம்மிக ரணதுங்க அச்சுறுத்திய வழக்கு, முடிவுக்கு வந்தது

ஊடகவியலாளரை தம்மிக ரணதுங்க அச்சுறுத்திய வழக்கு, முடிவுக்கு வந்தது 0

🕔28.Jul 2016

துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக ரணதுங்க, ஊடகவியலாளர்  ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று வியாழக்கிழமை சமரசத்துக்கு வந்தது. இதனையடுத்து, குறித்த வழக்கினை கொழும்பு பிரதம நீதவான் முடிவுறுத்துவதாக அறிவித்தார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை, கடந்த மார்ச் 16 ஆம் திகதியன்று,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்