வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; நோயாளிகள் அவதி

🕔 August 3, 2016

Drugs shortages - 022
– க. கிஷாந்தன் –

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரப்பத்தனை, லிந்துலை மற்றும் டயகம உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளில் கணிசமான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

மேற்படி வைத்தியசாலைகளுக்கு வருகின்ற நோயாளர்களில் அதிகமானோர் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்தோர் என்பதால், அதிகாலை கிளம்பி வைத்தியசாலைகளுக்கு வருகின்றனர். இந்த நிலையில், பல மணி நேரம் இவர்கள் வைத்திய பரிசோதனைக்காக வரிசையில் காத்திருப்பதோடு, பரிசோதனையின் பின்னர், வைத்தியர்கள் வழங்கும் மருந்துச் சிட்டைகளை தனியார் மருந்துக் கடைகளில் கொடுத்து, மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறப்படுகிறது.

இங்கு வரும் நோயாளர்களில் அதிகமானோர் ஏழைகள் என்பதனால், தங்களால் மருந்துகளை தனியார் மருந்துக் கடைகளில் பணம் கொடுத்து வாங்க முடிவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரதேசத்தில் குளவி கொட்டுக்கிழக்காகும் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகின்ற போதிலும், இவ் வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாத காரணத்தினால், வெளி மாவட்ட வைத்தியசாலைக்கு அவர்கள் இடமாற்றப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, இவ்வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக இருக்கும் மருந்துகளை உடனடியாக வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.Drugs shortages - 011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்