Back to homepage

Tag "மருந்துகள்"

தரப் பரிசோதனையில் இவ்வருடம் 115 மருந்துகள் தோல்வி: இவற்றில் அதிகமானவை இந்தியாவிலிருந்து வந்தவை

தரப் பரிசோதனையில் இவ்வருடம் 115 மருந்துகள் தோல்வி: இவற்றில் அதிகமானவை இந்தியாவிலிருந்து வந்தவை 0

🕔23.Nov 2023

தரப் பரிசோதனையில் இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 115 மருந்துகள் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்துகள் விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகளின் தரத் தோல்விகளாக உள்ளன என்று, அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தர சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், சுமார் 58 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும். 45 மருந்துகள் உள்நாட்டில்

மேலும்...
73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி

73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி 0

🕔14.Aug 2023

நாட்டில் 73 மருந்துகள் தர பரிசோதனையில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது. தர பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ள மருந்துகளில் 45 வகையான மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 17 மருந்து வகைகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வை என்றும், ஏனையவை பாகிஸ்தான், ஜப்பான், பங்களாதேஷ்

மேலும்...
அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம்: ஜனாதிபதி வலியுறுத்தல்

அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம்: ஜனாதிபதி வலியுறுத்தல் 0

🕔14.Jul 2023

மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டுமெனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும் விசேட இணையத்தளம் மூலம், ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மருந்துகளின் அளவு மற்றும் நாளாந்தம் பெற்றுக்கொள்ளும் மொத்த மருந்துத் தொகை குறித்த தரவுகளை

மேலும்...
மருந்துகளுக்கான விலைகள் குறைகின்றன: எத்தனை வீதம் என்பது குறித்தும் தகவல்

மருந்துகளுக்கான விலைகள் குறைகின்றன: எத்தனை வீதம் என்பது குறித்தும் தகவல் 0

🕔5.Jun 2023

மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளுக்கான விலைகளே இவ்வாறு குறையவுள்ளன. இதற்கமைய, குறித்த மருந்துகளின் விலை 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் இந்த விலைக்குறைப்பு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள், இந்தியக் கடனில் இறக்குமதி: டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவிப்பு

இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள், இந்தியக் கடனில் இறக்குமதி: டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவிப்பு 0

🕔10.Feb 2023

இந்தியாவிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 36 வகையான மருந்துகள், இலங்கையில் பதிவு செய்யப்படாதவை என, தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் ஆலோசகர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்தியா வழங்கிய கடனில் – இந்த மருந்துகள், குஜராத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய கடனில் வாங்கப்பட்ட 80 சதவீத மருந்துகள் – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும்

மேலும்...
60 வகையான மருந்துகளுக்கு நிர்ணய விலைகள் அறிவிப்பு

60 வகையான மருந்துகளுக்கு நிர்ணய விலைகள் அறிவிப்பு 0

🕔17.Nov 2021

மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை ராஜாங்க அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, 60 அத்தியாவசிய மருந்துகளை சேர்ந்த 131 டோஸ்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டு, அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளில் எதனையும் அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக விற்பனை

மேலும்...
மனநோய் சிகிச்சைக்கான மருந்துகள், வன்முறை நடத்தைகளை ஏற்படுத்தாது: பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு வைத்தியர்கள் சங்கம் பதில்

மனநோய் சிகிச்சைக்கான மருந்துகள், வன்முறை நடத்தைகளை ஏற்படுத்தாது: பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு வைத்தியர்கள் சங்கம் பதில் 0

🕔4.Dec 2020

மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளினால் வன்முறை நடத்தைகள் ஏற்பட மாட்டாது என இலங்கை மனநோய் வைத்தியர்கள் சங்கம் (Sri Lanka College of Psychiatrists) அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை கைதிகள் பயன்படுத்தியமையே, மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை நடத்தைக்கு காரணம் என கூறுவது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாக அமையும்

மேலும்...
வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; நோயாளிகள் அவதி

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; நோயாளிகள் அவதி 0

🕔3.Aug 2016

– க. கிஷாந்தன் – நுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரப்பத்தனை, லிந்துலை மற்றும் டயகம உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளில் கணிசமான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். மேற்படி வைத்தியசாலைகளுக்கு வருகின்ற நோயாளர்களில் அதிகமானோர் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்தோர் என்பதால், அதிகாலை கிளம்பி வைத்தியசாலைகளுக்கு வருகின்றனர். இந்த நிலையில், பல மணி நேரம் இவர்கள் வைத்திய பரிசோதனைக்காக

மேலும்...
சுகாதார அமைச்சரின் ஊரில், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

சுகாதார அமைச்சரின் ஊரில், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு 0

🕔22.Jan 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை ‘பிரதேச வைத்தியசாலை’யில் குளிசை மற்றும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றமையால், வெளிநோயார்களுக்கு கணிசமான மருந்து வகைகளை மருந்துக் கடைகளில் பெற்றுக் கொள்ளுமாறு கூறி, வைத்தியர்கள் மருந்துச் சீட்டுக்களை எழுதிக் கொடுக்கின்றனர். இந்த நிலையில், இவ்வாறு வைத்தியர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்