60 வகையான மருந்துகளுக்கு நிர்ணய விலைகள் அறிவிப்பு

🕔 November 17, 2021
அடையாளப் படம்

ருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை ராஜாங்க அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, 60 அத்தியாவசிய மருந்துகளை சேர்ந்த 131 டோஸ்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டு, அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளில் எதனையும் அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏதாவது ஒரு இடத்தில் கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் complaints@nmra.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக அறிவிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் வைத்தியர் ஆர்.எம்.எஸ்.கே.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி அதிகரித்த கடந்த ஓகஸ்ட் மாதத்தில் நூற்றுக்கு 09 சதவீதத்தால் விலை அதிகரிக்க அனுமதி வழங்கியதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்