மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்

🕔 August 4, 2016

Anura Kumara - 044
ஹிந்­த ­ரா­ஜபக்ஷவுக்கும் ரணில் விக்­கி­ர­ம ­சிங்­க­வுக்கும் இடையில் ‘டீல்’ உள்­ளது என்று, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக தெரிவித்தார்.

தன்மீதான குற்­றச்­சாட்­டுக்­களிலிருந்து, தன்னைக் பாது­காத்­துக்­கொள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில் தேவைப்­ப­டு­கின்றார். அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ கட்சியை இரண்­டாக்கி, குழப்­பத்தை ஏற்­ப­டுத்த ரணி­லுக்கும் மஹிந்த அணி­ தேவைப்ப­டுகிறது என்றும் அனுரகுமார திஸாநாயக கூறினார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைமை அலு­வ­ல­கத்தில், நேற்று புதன்கிழமை நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே, அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“தான் என்ன குற்றம் செய்­தாலும், எவ்­வாறு செயற்­பட்­டாலும் ரணில் தன்னை காப்பாற்­றுவார் என்ற நம்­பிக்கை மஹிந்த ராஜபக் ஷவுக்கு உள்­ளது. அந்த நம்பிக்கையில்தான் அவர் நட­மா­டு­கின்றார்.

ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் மக்கள் விடு­தலை முன்­னணி மறை­முக தொடர்­பு­களை வைத்­துள்­ள­தாக கூறு­கின்­றனர். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவும் அதை தெரி­வித்­துள்ளார். உண்­மையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் யாருக்கு ர­க­சிய உடன்படிக்கை உள்­ளது. எமக்கா அல்­லது இன்று பொது எதி­ர­ணி­யென கூறி­கொள்ளும் நபர்­க­ளுக்கா?

சிரந்தி ராஜபக்ஷவை நிதி மோசடி குற்­றச்­சாட்டில் நிதிக்­குற்றப் புல­னாய்வு பிரிவு விசார­ணைக்கு அழைப்பு விடுத்தபோது, அங்கு விசா­ர­ணை­களை நடத்­தாது சபா­நாயகர் வீட்டுக்குச் சென்று வாக்­கு­மூ­லத்தை கொடுத்­தது எவ்­வாறு? இதில்’டீல்’ இல்லையா?

அதேபோல் இந்த விசா­ர­ணையில் சிரந்தி ராஜபக்ஷவை கைது ­செய்து நீதி­மன்றில் ஒப்ப­டைக்க அறிக்கை வந்தும், இன்­று­வரை அவரை கைது­செய்­யாது நான்­கு­ மாத கால­மாக காப்­பாற்­று­வது யார்?

மஹிந்த ராஜபக்ஷ நேர­டி­யாக ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் தொடர்­பு­களை ஏற்படுத்தியே இந்த குற்­றங்­களில் இருந்து தப்­பித்து வரு­கின்றார். இதுதான் இவர்கள் கூறும் ‘டீல்’.

அதேபோல் கட­வுச்­சீட்டு விவ­கா­ரத்தில் விமல் வீர­வன்­சவை கைது செய்­யாது காப்பாற்றி­யது யார்? இந்த விட­யத்தை பிர­தமர் நாடாளு­மன்­றத்தில் நேர­டி­யா­கவே தெரி­வித்தார்.

பஷில் ராஜபக்ஷ கைது­ செய்­யப்­ப­டு­வதும், வைத்­தி­ய­சா­லையில் அனுமதிக்கப்படுவதும் ஒரு டீல்தான்.

ஜனா­தி­பதி பிர­த­ம­ருடன் இவர்கள் உடன்­ப­டிக்­கை­களை செய்­து­கொண்டு நாடகமாடுகின்­றனர்.

ரணில் எப்­போதும் ஜே.ஆர் இன் கொள்­கையில் பய­ணிப்­பவர். தமக்கு எத­ராக எழும் சவால்­களை இல்­லா­ம­லாக்குவதோடு, தமக்கு எதி­ராக எதி­ரணி உரு­வா­கக்­கூ­டாது என்பதே ஜே.ஆர் இன் கொள்­கை­யாகும். அதே வழியில்தான் ரணிலும் பயணிக்கின்றார்,

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் ­கட்சி இன்று அவ்­வா­றான நகர்­வால்தான் பிள­வு­பட்­டுள்­ளது. ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் பெரிய டீல் உள்­ளது.

அதேபோல் இந்த பாத­யாத்­தி­ரை­கூட ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ரான ஒன்­றல்ல. இது ரணிலின் ஆட்­சியை பலப்­ப­டுத்தும் வகையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட பாதயாத்திரை­யாகும். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் பிர­தான உரையின்­போது கூட, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பெய­ரையோ அவர்­க­ளது செயற்­பாடு­க­ளையோ ஏன் விமர்­சிக்­க­வில்லை.

எம்­மையும், சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களையும் மட்­டுமே அவர் விமர்­சித்தார். ஆகவே யார் ர­க­சிய உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொண்டு மக்­களை ஏமாற்­று­கின்­றனர் என்பதை இப்­போது நன்­றாக தெரிந்­து­கொள்ள வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்