நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்

🕔 August 5, 2016

Sanath Nisantha - 013நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு நேற்று வியாழக்கிழமை கூடிய போது, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, சுதந்திரக் கட்சியின் கட்சியின் தலைமையை வெளிப்படையாக விமர்சித்து வந்தமை குறித்து, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்