தகவலறியும் சட்டமூலத்தில், சபாநாயகர் கையெழுத்திட்டார்; ஊடகத்துறை அமைச்சர்

🕔 August 2, 2016

Gayantha karunathilaka - 865கவலறியும் சட்ட மூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார் என நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத்  தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், குறித்த சட்ட மூலத்துக்கு என்னானது என, பத்திரிகையாளரொருவர் அமைச்சரிடம் கேட்டபோதே, இந்தத் தகவலை அவர் கூறினார்.

சபாநாயகர் வௌிநாடு சென்றிருந்ததால் அதில் கையெழுத்திட தாமதமானதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தகவலறியும் சட்டமூலம் சில திருத்தங்களுடன் ஜுன் மாதம் 24ம் திகதி வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்