பேச்சுவார்த்தை தோல்வி; தொடர்கிறது பணிப் பகிஸ்கரிப்பு

🕔 August 4, 2016

Strike - 098ல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும்,  பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும், அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சங்க சம்மேளனத்துக்கும் இடையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, பணிப் பகிஸ்கரிப்பு தொடரும் எனக் கூறப்படுகிறது.

பல கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம், ஊழியர்கள் சங்க சம்மேளத்தின் பிரதிநிதிகளுக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும், அது வெற்றியளிக்கவில்லை.

இதனையடுத்து, போராட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி முதல், பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தப் போராட்டமானது, இன்று வியாழக்கிழமை 09ஆவது நாளாகவும் தொடர்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்