மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைத் தெரியப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

🕔 August 2, 2016

Red, yellow, green - 01மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவினை தெரியப்படுத்தும் வகையில், அவை அடைக்கப்பட்டுள்ள போத்தல்களின் மூடிகளுக்கு நிறமூட்டும் நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய 1980 ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சீனியின் அளவைத் தெரியப்படுத்தும் வகையில், மென்பான போத்தல்களின் மூடிகளுக்கு நிறமூட்டப்படாமல் இருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் 100 மில்லிலீட்டரில் 11 கிராம் சீனிக்கு அதிகமாக உள்ள போத்தல்களுக்கு சிவப்பு வர்ண மூடியும். 02 தொடக்கம் 11 கிராமுக்கு உட்பட்ட சீனி அளவை கொண்ட போத்தல்களின் மூடிகள் மஞ்சள் நிறத்திலும், 02 கிராமுக்கு குறைவான சீனி அளவை கொண்ட குளிர்பான போத்தல்களுக்கு பச்சை வர்ண மூடிகளும் வழங்கப்படவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்