மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு

🕔 August 3, 2016

Shibly farook - 01 ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

மாலை அணிவித்து, தன்னை வரவேற்கக் கூடாது என்று – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.

உலமாக்களின் வழிகாட்டலின் பிரகாரமும், அவர்களின் மார்க்க அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும், தான் – இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலேயே இந்த அறிவிப்பை ஷிப்லி பாறூக் விடுத்திருக்கின்றார்.

எனவே, தான் கலந்து கொள்கின்ற விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில், தன்னை மாலை அணிவித்து வரவேற்கக் கூடாது என்று ஆவர் தெரிவித்திருக்கின்றார்.

ஏற்கனவே, தான் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், குத்து விளக்கேற்றுதல் போன்ற – மாற்று மதத்தவர்களின் சமய மற்றும் கலாசார அனுஷ்டானங்களை மேற்கொள்வதிலிருந்தும் ஷிப்லி பாறூக் தவிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Shibly farook - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்