மைத்திரியை சுதந்திரக் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது

🕔 August 5, 2016

Sanath nishantha - 053மைத்திரிபால சிறிசேனவை, ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவை சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதாக, ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் மத்திய குழு, நேற்று வியாழக்கிமை தீர்மானித்தமையினையடுத்து, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதியும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த – மிகப் பகிரங்கமாக விமர்சித்து வந்த நிலையில், அவர் மீது – ஒழுக்காற்று நடவடிக்கை எழுக்கும் வகையில், இந்தத் தீர்மானத்தினை சுதந்திரக் கடசியி எடுத்துள்ளது.

இதேவேளை, ஒழுக்கத்தை மீறி செயற்பட்ட கட்சியின் – மேலும் சில உறுப்பினர்கள் குறித்து விசாரிப்பதற்கும், ஒழுக்காற்று குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்