Back to homepage

மேல் மாகாணம்

பால் மா விலை அதிகரிக்கிறது

பால் மா விலை அதிகரிக்கிறது 0

🕔4.May 2018

பால் மாவின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க 400 கிராம் பால் மாவின் விலை 20 ரூபாவினாலும் , ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன. பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வாழ்க்கைச் செலவு குழு பரிந்துரைத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மேலும்...
ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, 02 கோடி ரூபாய் லஞ்சம் பெறும் போது கைதானார்

ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, 02 கோடி ரூபாய் லஞ்சம் பெறும் போது கைதானார் 0

🕔3.May 2018

ஜனாதிபதியின் தலைமை அதிகாரி கலாநிதி ஐ.எச்.கே. மஹாநாம மற்றும் மரக்கூட்டுத்தாபனத் தலைவர் பி. திசாநாயக ஆகியோர் 02 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்ற போது, இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். பிரபலமான சொகுசு ஹோட்டலொன்றில் வைத்து இவர்கள் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து

மேலும்...
வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்றவர் கைது

வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்றவர் கைது 0

🕔3.May 2018

வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்ற நபரரொருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கம்பஹா- உடுகம்பொல பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் பணத்தை இவ்வாறு மோசடியான முறையில் அவர் கடனாக பெற்றுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணையின் போது

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; மீண்டும் உறுதிப்படுத்தினார் மைத்திரி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; மீண்டும் உறுதிப்படுத்தினார் மைத்திரி 0

🕔2.May 2018

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் தான் போட்டியிட போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். “முந்தைய நிலைப்பாடே எனது தற்போதைய நிலைப்பாடாகும். நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே கூறி விட்டேன். எனினும் மீண்டும், மீண்டும் என்னிடம் இந்த

மேலும்...
ராஜாங்க அமைச்சர்கள் 08 பேரும், 10 பிரதியமைச்சர்களும் இன்று பதவியேற்பு

ராஜாங்க அமைச்சர்கள் 08 பேரும், 10 பிரதியமைச்சர்களும் இன்று பதவியேற்பு 0

🕔2.May 2018

அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் பொருட்டு, நேற்று செவ்வாய்கிழமை புதிய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று புதன்கிழமை 08 ராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பதவியேற்றுக் கொண்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் விபரங்கள் வருமாறு; ராஜாங்க அமைச்சர்கள் மொஹான் லால் கிரேரு

மேலும்...
தினக்குரலுக்கு இது முதல் தடவையல்ல; முகம்மது நபி என்று கூறி, வாளுடன் காட்டூன் உருவம் வரைந்ததை மறந்து விட முடியாது

தினக்குரலுக்கு இது முதல் தடவையல்ல; முகம்மது நபி என்று கூறி, வாளுடன் காட்டூன் உருவம் வரைந்ததை மறந்து விட முடியாது 0

🕔2.May 2018

– அஹமட் – தினக்குரல் பத்திரிகை முஸ்லிம்களை இழிவுபடுத்த முயற்சிப்பது இதுவொன்றும் முதல் தடவையல்ல. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் இனவாதத்தோடு செயற்படுவதாக, கடந்த சனிக்கிழமை தினக்குரல் பத்திரிகை முன்பக்கத் தலைப்பு செய்தியொன்றினை வெளியிட்டது. இவ்வாறானதொரு செய்தியினை வெளியிடுவதன் மூலம், முஸ்லிம்களிடமிருந்து என்ன வகையான எதிர்ப்புகள் கிளம்பும் என்பது தெரியாமல், அந்தச் செய்தியை தினக்குரல்

மேலும்...
முஸ்லிம் மக்கள் விவகாரம்; தலைப்பில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்: பூசி மொழுக தினக்குரல் முயற்சி

முஸ்லிம் மக்கள் விவகாரம்; தலைப்பில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்: பூசி மொழுக தினக்குரல் முயற்சி 0

🕔2.May 2018

– முன்ஸிப் – ‘கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக தலைதூக்கும் முஸ்லிம் இனவாதம்’ எனும் தலைப்பில் செய்தியொன்றினை கடந்த சனிக்கிழமை வெளிட்ட தினக்குரல் பத்திரிகை, அது தொடர்பில் முஸ்லிம்கள் வெளிக்காட்டிய எதிர்ப்பினையடுத்து, இன்று வியாழக்கிழமை “தவறுக்கு வருந்துவதாக” செய்தியொன்றினை வெளியிட்டு, தனது இனவாத செயற்பாட்டினை பூசி மொழுக முயற்சித்திருக்கிறது. முஸ்லிம் பிரதேசங்களில் தினக்குரல் பத்திரிகையை தடைசெய்யும் நடடிக்கை மேற்கொள்ளப்பட்டு

மேலும்...
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் குறித்து, நாமல் ராஜபக்ஷ கிண்டல்

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் குறித்து, நாமல் ராஜபக்ஷ கிண்டல் 0

🕔1.May 2018

நல்லாட்சி அரசாங்கம் அமைச்சரவை மாற்றத்தில் உலக சாதனை படைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை

மேலும்...
ரவிக்கு ஏமாற்றம், பொன்சேகாவுக்கு அதிருப்தி

ரவிக்கு ஏமாற்றம், பொன்சேகாவுக்கு அதிருப்தி 0

🕔1.May 2018

புதிய அமைச்சரவை நியமனத்தின் போது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதும், அது – கிடைக்கவில்லை. மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் தொடர்புபட்டார் என்கிற குற்றச்சாட்டினை அடுத்து, தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை ரவி ராஜிநாமா செய்திருந்தார். அதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு

மேலும்...
இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த, தாய்லாந்தின் சிமெந்து நிறுவனம் முன்வருகை

இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த, தாய்லாந்தின் சிமெந்து நிறுவனம் முன்வருகை 0

🕔1.May 2018

“இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு, இன்சீ’ (INSEE) சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோகக் குழு ஒன்றினைந்துள்ளோம்” என ‘இன்சீ’ சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் நிறைவேற்றுத் துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான ஜான் குனிக் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தொழில் முனைவோர் கூட்டு

மேலும்...
புதிய அமைச்சரவை நியமனம்: விஜேதாசவுக்கு உயர்கல்வி அமைச்சு

புதிய அமைச்சரவை நியமனம்: விஜேதாசவுக்கு உயர்கல்வி அமைச்சு 0

🕔1.May 2018

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று செவ்வாய்கிழமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்பட்டன. தேசிய அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும். அதிகமான அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகள் தற்போது மாற்றப்பட்டுள்ள போதிலும், சிலருக்கு முன்னைய அமைச்சுப் பதவிகளே தற்போதும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள்

மேலும்...
மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு

மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு 0

🕔1.May 2018

மாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலைமை உரு­வாகி உள்­ளதாக பெப்ரல் மற்றும் கபே அமைப்­புக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் காலதா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யால், இந்த நிலைவரம் உருவாகியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் கூறியுள்ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை நாடா­ளு­மன்றில்­ இதுவரை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹன

மேலும்...
முகத்தை மூடும் அபாயாக்களை தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஞானசார தேரர்

முகத்தை மூடும் அபாயாக்களை தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஞானசார தேரர் 0

🕔30.Apr 2018

பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது என, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள்  அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் எனவும்

மேலும்...
அரசியல்வாதியின் ‘காசு தன்சல’: இலங்கையில் முதல் தடவை

அரசியல்வாதியின் ‘காசு தன்சல’: இலங்கையில் முதல் தடவை 0

🕔30.Apr 2018

வெசாக் தினத்தை முன்னிட்டு பணத்தை தானமாக வழங்கும் ‘காசு தன்சல’ ஒன்றினை, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இந்துனி சாந்த குணசேகர நடத்தினார். பௌத்தர்களின் புனித நாட்களில் ஒன்றான வெசாக் தினத்தையொட்டி அன்னதானம், நீராகார தானம் போன்றவற்றினை மக்களுக்கு வசதி படைத்த தனி நபர்களும், அமைப்புகளும் வழங்குவது வழமையாகும். இதனை ‘தன்சல’ என்று அழைப்பர்.

மேலும்...
தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள்

தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள் 0

🕔28.Apr 2018

திருகோணமலை சண்முகா கல்லூரி ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை வைத்து, சமூக வலைத்தளங்களில் தமிழ் சமூகத்தை முஸ்லிம்கள் மோசமாகச் சித்தரிப்பதாகவும், இது முஸ்லிம்களின் அதியுச்ச இனவாதத்தைக் கக்கும் செயல் என்றும், தினக்குரல் பத்திரிகை இன்று சனிக்கிழமை  செய்தி வெளியிட்டுள்ளது. யாழ் தினக்குரல் பத்திரிகையின் முன்பக்க பிரதான தலைப்புச் செய்தியாக இது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ‘கிழக்கில் தமிழர்களுக்கெதிராகத் தலை தூக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்