தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள்

🕔 April 28, 2018

திருகோணமலை சண்முகா கல்லூரி ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை வைத்து, சமூக வலைத்தளங்களில் தமிழ் சமூகத்தை முஸ்லிம்கள் மோசமாகச் சித்தரிப்பதாகவும், இது முஸ்லிம்களின் அதியுச்ச இனவாதத்தைக் கக்கும் செயல் என்றும், தினக்குரல் பத்திரிகை இன்று சனிக்கிழமை  செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ் தினக்குரல் பத்திரிகையின் முன்பக்க பிரதான தலைப்புச் செய்தியாக இது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

‘கிழக்கில் தமிழர்களுக்கெதிராகத் தலை தூக்கும் முஸ்லிம் இனவாதம்’ என்று இந்தச் செய்திக்கு தினக்குரல் பத்திரிகை தலைப்பிட்டுள்ளது.

தினக்குரல் பத்திரிகையை முன்னர் சாமி எனும் நபரொருவர் தனியாக நடத்தி வந்தார். ஆயினும், சில காலங்களுக்கு முன்னர் இந்தப் பத்திரிகையை ‘வீரகேசரி’ பத்திரிகை நிறுவனம் கொள்வனவு செய்தது.

அந்தவகையில், வீரகேசரி நிருவாகத்தினரின் கருத்துக்கள்தான் தினக்குரல் பத்திரிகையின் கருத்தாகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்படி பார்த்தால், தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாதக் கருத்துக்களை வீரகேசரி பத்திரிகை நிருவாகம்தான்  பரப்பத் தொடங்கியுள்ளமையினைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தினக்குரலின் ஊடாக முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம், வீரகேசரி பத்திரிகையை நோக்கி முஸ்லிம் வாசகர்களைத் திருப்பி விடுவதற்கான, வீரகேசரி நிருவாகத்தின் கேவலமான வியாபாரத் தந்திரமாகவும் இதனைப் பார்க்க முடிகிறது.

எவ்வாறாயினும், வீரகேசரி நிருவாகத்தின் கீழ் வெளியிடப்படும் தினக்குரல் பத்திரிகையானது முஸ்லிம்களுக்கு எதிராக, இவ்வாறு அப்பட்டமான இனவாதத்தைக் வாந்தியாகக் கக்கிய பின்னரும் அந்தப் பத்திரிகையையோ, அல்லது வீரகேரி நிறுவனம் வெளியிடுகின்ற வீரகேசரி உள்ளிட்ட ஏனைய பத்திரிகைகளையோ முஸ்லிம்கள் இனி கொள்ளவனவு செய்வது அவமானகரமானதாகும்.

எனவே, வீரகேசரி நிறுவனம் வெளியிடுகின்ற தினக்குரல் மற்றும் வீரகேசரி உள்ளிட்ட அனைத்துப் பத்திரிகைகையும் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என, சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்மை கவனத்துக்குரியதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்