ராஜாங்க அமைச்சர்கள் 08 பேரும், 10 பிரதியமைச்சர்களும் இன்று பதவியேற்பு

🕔 May 2, 2018

மைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் பொருட்டு, நேற்று செவ்வாய்கிழமை புதிய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று புதன்கிழமை 08 ராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பதவியேற்றுக் கொண்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் விபரங்கள் வருமாறு;

ராஜாங்க அமைச்சர்கள்

மொஹான் லால் கிரேரு – உயர்கல்வி மற்றும் கலாசார விவகார இராஜாங்க அமைச்சர்

ஏ.டி.சம்பிக்க பிரேமதாஸ – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

பாலித ரங்கே பண்டார – நீர் வழங்கள், வடிகாலமைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்

எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா – பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

ஶ்ரீயானி விஜேவிக்கிரம – மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர்

லக்ஸ்மன் செனவிரத்ன – பொதுநிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் இராஜாங்க அமைச்சர்

வீரகுமார திஸாநாயக்க – மஹாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

திலிப் வெத்தாரச்சி – மீன்பிடி, நீரியல்வளம் மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்

பிரதியமைச்சர்கள்

துனேஸ் கங்கந்த – காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு பிரதியமைச்சர்

எம்.எஸ்.அமீர் அலி – மீன்பிடி, நீரியல்வளம் மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர்

ரஞ்சன் ராமநாயக்க – சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர்

கருணாரத்ன பரணவிதான – விஞ்ஞானம் தொழில்நுட்பம், ஆய்வு திறன்அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலையக பாரம்பரிய பிரதியமைச்சர்

பாலித தெவரப்பெரும – நிலையான அபிவிருத்தி, வனஜீரராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதியமைச்சர்

சாரதி துஷ்மிந்த – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சர்

முத்து சிவலிங்கம் – உள்விவகாரம் விவகாரம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர்

மனுச நாணயக்கார – தொழில்நுட்பம், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர்

எச்.எம்.எம்.ஹரீஸ் – பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சர்

அலி ஷாஹிர் மௌலானா – தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்