புதிய அமைச்சரவை நியமனம்: விஜேதாசவுக்கு உயர்கல்வி அமைச்சு

🕔 May 1, 2018

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று செவ்வாய்கிழமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்பட்டன.

தேசிய அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.

அதிகமான அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகள் தற்போது மாற்றப்பட்டுள்ள போதிலும், சிலருக்கு முன்னைய அமைச்சுப் பதவிகளே தற்போதும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு;

லக்ஸ்மன் கிரியெல்ல  – பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி

மஹிந்த அமரவீர – விவசாயம்

எஸ்.பி.நாவின்ன – சர்வதேச விவகாரம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி

சரத் அமுனுகம – விஞ்ஞான தொழில்நுட்பம், ஆராய்ச்சி

துமிந்த திசாநாயக்க –  நீர்வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம்

தலதா அதுகோரல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

பைசர் முஸ்தபா – விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்

ரஞ்சித் மத்துமபண்டார – பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும்

கபிர் ஹாசிம் – பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி

பி.ஹரிசன் – சமூக அபிவிருத்தி

மனோ கணேசன் – தேசிய கலந்துரையாடல்கள், நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள்

சாகல ரத்நாயக்க – செற்றிட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி

டி.எம்.சுவாமிநாதன் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரம்

விஜித் விஜயமுனி சொய்சா – மீன்பிடி, கடற்றொழில் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம்

விஜயதாச ராஜபக்ச – உயர்கல்வி மற்றும் கலாசாரம்

ரவிந்திர சமரவீர – தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க விவகாரம்

சரத் பொன்சேகா – நிலையான அபிவிருத்தி, வனஜீரராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி

தயா கமகே – சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்ப கைத்தொழில்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்