ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; மீண்டும் உறுதிப்படுத்தினார் மைத்திரி

🕔 May 2, 2018

னாதிபதித் தேர்தலில் மீண்டும் தான் போட்டியிட போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

“முந்தைய நிலைப்பாடே எனது தற்போதைய நிலைப்பாடாகும். நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே கூறி விட்டேன்.

எனினும் மீண்டும், மீண்டும் என்னிடம் இந்த கேள்வியை கேட்கின்றனர். ஏன் கேட்கின்றனர் என்று எனக்கு புரியவில்லை” என, அந்த நேர்காணலில் ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று,  மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே கூறியிருந்தார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன என்று கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Comments