வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்றவர் கைது

🕔 May 3, 2018

வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்ற நபரரொருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கம்பஹா- உடுகம்பொல பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் பணத்தை இவ்வாறு மோசடியான முறையில் அவர் கடனாக பெற்றுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

கம்பஹா – பென்டியமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபரே, இவ்வாறு கைதாகியுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து பல பெயர்களைக் கொண்ட 04 போலியான அடையாள அட்டைகள் , 02 சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் 11 கடவுச்சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்