பால் மா விலை அதிகரிக்கிறது

🕔 May 4, 2018

பால் மாவின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க 400 கிராம் பால் மாவின் விலை 20 ரூபாவினாலும் , ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன.

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வாழ்க்கைச் செலவு குழு பரிந்துரைத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஒரு மெட்றிக் தொன் பால் மாவின் விலை 03 ஆயிரத்து 250 முதல் 03 ஆயிரத்து 350 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

அதன்விலை, எதிர்வரும் காலத்தில் 03 ஆயிரத்து 400 முதல், 03 ஆயிரத்து 500 வரை அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

சில தினங்களுக்கு முன்னர், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்