Back to homepage

மேல் மாகாணம்

சு.கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியதால் வந்த வினை

சு.கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியதால் வந்த வினை 0

🕔4.Jun 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியமையினால், “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தை அமைப்போம்” என்று தெரிவித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது. சு.கட்சியின் புதிய செயலாளராக ரோஹன லக்ஷமன் பியதாஸ, முதன்முதலில் ஊடகங்களுடன் பேசும் போது, இந்த நிலை ஏற்பட்டது. எவ்வாறாயினும் தனது தவறை புரிந்து கொண்ட புதிய செயலாளர்; “ஜனாதிபதி

மேலும்...
யாரையும் பின்கதவால் சந்தித்து, ஆட்சி மாற்றம் பற்றி நாம் கதைப்பதில்லை: அமைச்சர் றிசாட் பதியுதீன்

யாரையும் பின்கதவால் சந்தித்து, ஆட்சி மாற்றம் பற்றி நாம் கதைப்பதில்லை: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔4.Jun 2018

– சுஐப் எம்.காசிம் – முஸ்லிம்களின் பாரிய பங்களிப்புடனும், எமது கட்சியின் முதன்மைப் பங்களிப்புடனும் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், இந்த மூன்று வருட காலப் பகுதியில் நமது சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு எந்தவொரு நன்மையையும் மேற்கொள்ளாத போதும், நாங்கள் அரசாங்கத்துக்குள்ளேயே இருந்து, முடிந்தளவு சமூகத்தின் நன்மைக்காக போராடி வருகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
மஹிந்தவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, மைத்திரி எடுக்க வேண்டும்: வாசு

மஹிந்தவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, மைத்திரி எடுக்க வேண்டும்: வாசு 0

🕔4.Jun 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்கான தீர்மானத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார். சோஸலிச முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் உள்ளது. அதனை அதிகரிக்கும்

மேலும்...
கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளுக்கு பிணை

கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளுக்கு பிணை 0

🕔4.Jun 2018

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவியும் மகளும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பெண்ணொருவரை தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் குறித்த இருவரையும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இன்று  திங்கட்கிழமை மேற்படி இருவரும் நீதிமன்றில் சரணடைந்ததை அடுத்து, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும்...
முஸ்லிம்களின் எதிரியாக என்னை கூறினீர்களே, இப்போது என்ன நடக்கிறது: ஹக்கீடம் கேட்ட மஹிந்த

முஸ்லிம்களின் எதிரியாக என்னை கூறினீர்களே, இப்போது என்ன நடக்கிறது: ஹக்கீடம் கேட்ட மஹிந்த 0

🕔1.Jun 2018

– ஏ.எச்.எம். பூமுதீன் – மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறக்கும் (இப்தார்) நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அவருடைய கொழும்பு வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. 500 பேருக்கு மட்டும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்த போதிலும் சுமார் 750 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்,எம்.பௌஸி, ஹிஸ்புள்ளாஹ் , முன்னாள் அமைச்சர் அதாவுள்ளா உட்பட

மேலும்...
மைத்திரி நன்றி மறந்து விட்டார்; அமைச்சர் ஹரீன் குத்தல் பேச்சு

மைத்திரி நன்றி மறந்து விட்டார்; அமைச்சர் ஹரீன் குத்தல் பேச்சு 0

🕔1.Jun 2018

மைத்திரிபால சிறிசேன நன்றி மறந்து விட்டார் எனும் அர்த்தத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல் துறை பிரதானியும் அமைச்சருமான ஹரீன் பெணான்டோ குத்தல் தனமான கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார். “சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களை ஜனாதிபதியாக்கியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். எனினும் தற்போது அதனை ஒரு சிலர் மறந்துவிட்டனர். அதனை நாம் மீண்டும் நினைவூட்டுவதற்கு சத்தியத்துடன் களமிறங்கவுள்ளோம்”

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் பிணை மனு நிராகரிப்பு

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் பிணை மனு நிராகரிப்பு 0

🕔1.Jun 2018

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள  பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவன உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரை பிணையில் விடுமாறு முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்தன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த விடயம் விவாதத்திற்கு

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் சீனி நிறுவனத்தை கையளியுங்கள்; ஜனாதிபதிக்கு தொழிற்சங்கங்கள் மகஜர்

அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் சீனி நிறுவனத்தை கையளியுங்கள்; ஜனாதிபதிக்கு தொழிற்சங்கங்கள் மகஜர் 0

🕔1.Jun 2018

பாரிய நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை சீனி நிறுவனத்தை லாபமீட்டச் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து, அந்த நிறுவனத்தை வேறொரு அமைச்சரின் கீழ் கொண்டு வந்தமையின் நோக்கம் என்னவென்று இலங்கை சீனி நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் கேள்வியெழுப்பியுள்ளன. தற்போது இந்த நிறுவனம் கையளிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அமைச்சரின் கீழ்தான், ஏற்கனவே 100 நாள் அரசாங்கத்திலும் இந்த நிறுவனம் இருந்தது. ஆனால்

மேலும்...
மஹிந்தவின் இப்தார் நிகழ்வில் ஹக்கீம் பங்கேற்பு; 03 வருடங்களுக்குப் பின்னர் பகிரங்க கலந்துரையாடல்

மஹிந்தவின் இப்தார் நிகழ்வில் ஹக்கீம் பங்கேற்பு; 03 வருடங்களுக்குப் பின்னர் பகிரங்க கலந்துரையாடல் 0

🕔1.Jun 2018

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் ஹக்கீம் கலந்து கொண்ட போதே, இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற

மேலும்...
கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔1.Jun 2018

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோரைக் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது. மேற்படி இருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு, இதன்போது நீதிவான் உத்தரவிட்டார். பெண் ஒருவரைத் தாக்க முயற்சித்தமை தொடர்பான வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
இலங்கையின் புதிய வரைபடம் வெளியாகியது; மேலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிப்பு

இலங்கையின் புதிய வரைபடம் வெளியாகியது; மேலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிப்பு 0

🕔31.May 2018

இலங்கையின் புதிய வரைபடத்தின் 2 ஆவது பதிப்புக்கான வெளியீட்டு நிகழ்வு இன்று வியாழக்கிழமை இலங்கை நில அளவை திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக , நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி. உதயகாந்த மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர். 1:500 எனும் விகிதத்தில் இலங்கைக்கான

மேலும்...
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை 0

🕔30.May 2018

மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு, மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் முடிவடைந்த போதும், அந்த

மேலும்...
அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன்

அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன் 0

🕔29.May 2018

அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றவர்களில், இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர் என்று, இலங்கை மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 06 பேரும், ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 17 பேருமாக மொத்தம் 118 பேர் இவ்வாறு பணம் பெற்றுனர் என்று, அந்த நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் கீர்த்தி

மேலும்...
எனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்: தயாசிறி ஜெயசேகர

எனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்: தயாசிறி ஜெயசேகர 0

🕔29.May 2018

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், ஐ.தே.கட்சி உட்பட பல கட்சிகளின் பிரசார பணிகளுக்கும் வேறு தேவைகளுக்கும் என 1.3 பில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளார் என்று  முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணிகளுக்காக தனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாவினை வழங்கிய போதும், அவரை பாதுகாக்க ஒருபோதும்  தான் முயற்சிக்கவில்லை

மேலும்...
மறவன்புலவு சச்சிதானந்தனை எதிர்ப்பவர்களுக்கு, இந்து சம்மேளனம் எச்சரிக்கை

மறவன்புலவு சச்சிதானந்தனை எதிர்ப்பவர்களுக்கு, இந்து சம்மேளனம் எச்சரிக்கை 0

🕔29.May 2018

சிவசேனையின் தலைவர், மறவன்புலவு க. சச்சிதானந்தனுக்கு எதிராக கருத்து வெளியிடும் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கட்சி வேறுபாடின்றி எதிர்வரும் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுவர் என்று இலங்கை இந்து சம்மேளனம் கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும் இவ்வாறான அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க இந்து மத வாக்கு வங்கி பயன்படுத்தப்படும் என்று அதற்காக பயிற்சிபெற்ற தொண்டர்கள் களமிறக்கப்படுவர் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்