அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் பிணை மனு நிராகரிப்பு

🕔 June 1, 2018

த்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள  பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவன உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரை பிணையில் விடுமாறு முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்தன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த விடயம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த இருவருக்கும் பிணை வழங்குவதற்கான விசேட காரணம் அறிவிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் மன்றில் தெரிவித்தது. இதனையடுத்து, குறித்த இருவருக்குமான பிணை நிராகரிக்கப்பட்டது.

இதற்கமைய குறித்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்