Back to homepage

பிரதான செய்திகள்

கிழக்கு முதலமைச்சருக்கு பாதுகாப்பு அமைச்சு ‘ஆப்பு’

கிழக்கு முதலமைச்சருக்கு பாதுகாப்பு அமைச்சு ‘ஆப்பு’ 0

🕔26.May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், முப்படையினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் முப்படையினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. சம்பூர் மகா வித்தியாலயத்தில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற

மேலும்...
கிழக்கு முதலமைச்சர் திட்டியமை குறித்து, ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளேன்: பாதுகாப்பு செயலாளர்

கிழக்கு முதலமைச்சர் திட்டியமை குறித்து, ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளேன்: பாதுகாப்பு செயலாளர் 0

🕔25.May 2016

கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் திட்டி – அதட்டிய சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு – தான் விளக்கமளித்துள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இன்று புதன்கிழமை தெரிவித்தார். இதேவேளை, இது தொடர்பில் கடற்படைத் தளபதி நேற்றைய தினம் அறிக்கையொன்றினைக் கையளித்ததாகவும் பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சி கூறினார். தற்போது ஜனாதிபதி

மேலும்...
ஹக்கீமுடனான பேச்சுவார்த்தையின் போது, நான் MP பதவி கோரவில்லை; ஹசனலி தெரிவிப்பு

ஹக்கீமுடனான பேச்சுவார்த்தையின் போது, நான் MP பதவி கோரவில்லை; ஹசனலி தெரிவிப்பு 0

🕔25.May 2016

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், தனக்குமிடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது, தான் நாடாளு­மன்ற உறுப்­பினர் பத­வினையோ, அமைச்சுப் பதவினையோ கோரவில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார். மேற்படி விடயங்கள் குறித்து பேசாத நிலையில், சில ஊட­கங்கள் இப்­ப­த­வி­களை தான் கோரி­ய­தாக தவ­றான செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளதாகவும் அவர் கூறியுள்ளார். மு.காங்கிரசின் தலைவர் மற்றும் செயலாளருக்கு இடையில் நிலவி

மேலும்...
ஜனாதிபதி ஜப்பான் பயணம்

ஜனாதிபதி ஜப்பான் பயணம் 0

🕔25.May 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை ஜப்பான் பயணமானார். ஜப்பானில் இடம்பெறவுள்ள ஜி – 7 மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக அவர் பயணித்தார். மேற்படி மாநாடு நாளை வியாழக்கிழமையும், நாளை மறுதினமும் அங்கு நடைபெறுகிறது.

மேலும்...
தனியான கல்வி வயலம் தொடர்பில் இனரீதியாக அச்சம் கொள்ளக் கூடாது: எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு

தனியான கல்வி வயலம் தொடர்பில் இனரீதியாக அச்சம் கொள்ளக் கூடாது: எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு 0

🕔25.May 2016

– றியாஸ் ஆதம் – தனியான கல்வி வலயங்களை உருவாக்கும் போது, அவை தொடர்பில் இனரீதியாகச் சிந்தித்து, யாரும் அச்சம் கொள்ளக் கூடாது என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார். மேலும், குச்சவெளி மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கு தனியான கல்வி வயலங்களை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம், அப்பிரதேசங்களின் கல்வித் தேவைகளை

மேலும்...
கடற்படை அதிகாரியை திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்; அநாகரீகத்தின் உச்சம் என விமர்சனம்

கடற்படை அதிகாரியை திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்; அநாகரீகத்தின் உச்சம் என விமர்சனம் 0

🕔24.May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரி ஒருவரை நிகழ்வொன்றில் வைத்து அநாகரீகமாக திட்டிய சம்பவம் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. திருகோணமலை சம்பூர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, குறித்த கடற்படை அதிகாரியை – கிழக்கு மாகாண முதலமைச்சர் மிகவும் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் ஊடகங்களிலும்

மேலும்...
அனுஷவின் நியமனம் தொடர்பில் கண்டனம்

அனுஷவின் நியமனம் தொடர்பில் கண்டனம் 0

🕔24.May 2016

உள்விவகார அமைச்சின் மேலதிக செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ‘கபே’ அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளராக, கடந்த ஆட்சியில் இவர் பதவி வகித்திருந்தார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு மோடிசகளுடன் தொடர்புபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை

மேலும்...
வசீம் கொலையில் கைதான அனுர சேனநாயக்கவுக்கு வைத்தியப் பரிசோதனை

வசீம் கொலையில் கைதான அனுர சேனநாயக்கவுக்கு வைத்தியப் பரிசோதனை 0

🕔24.May 2016

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட அனுர சேனாநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் –  சிறைச்சாலை

மேலும்...
மறைந்தும் மறையாத மசூர் சின்னலெப்பை

மறைந்தும் மறையாத மசூர் சின்னலெப்பை 0

🕔24.May 2016

– முஹம்மட் – (கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் நான்காவது ஆண்டு நினைவு தினம் 22 மே 2016 அன்றாகும்) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மசூர் சின்னலெப்பை வபாத்தாகி நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. உடலால் அன்னார் மறைந்து விட்டபோதும், அவருடைய நல்ல

மேலும்...
பாதிக்கப்பட்ட இடங்களைப் புனரமைக்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் தேவை; நிதியமைச்சர்

பாதிக்கப்பட்ட இடங்களைப் புனரமைக்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் தேவை; நிதியமைச்சர் 0

🕔24.May 2016

இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை புனரமைப்பதற்காக, 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றினால் இதுவரை ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையான கணிப்பீடு மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இந்த கணிப்பீட்டினைத் தெரிவிவிப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். சட்டவிரோத குடியேற்றம்,

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, மு.காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி நாளை ஆரம்பம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, மு.காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி நாளை ஆரம்பம் 0

🕔24.May 2016

  இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையிலான இரண்டாம் கட்டப் பணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – நாளை புதன்கிழமை முதல் ஈடுபடவுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாம் கட்ட நடவடிக்கை சம்மந்தமான கலந்துரையாடல், கட்சியின் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் – நேற்று திங்கட்கிழமை கட்சியின் தலைமை காரியாலயம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, முஸ்லிம்

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், பொலிஸ் பொறுப்பதிகாரியொருவர் நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம்

தாஜுதீன் கொலை தொடர்பில், பொலிஸ் பொறுப்பதிகாரியொருவர் நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம் 0

🕔24.May 2016

வசீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் நீதவானிடம் ரகசிய வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ளார். நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, வெல்லால ஆராச்சிகே சரத்சந்திர என்பவரே இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை இந்த வாக்கு மூலத்தை வழங்கினார். மேற்படி நபர்

மேலும்...
மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் விரைவில் மாற்றம்

மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் விரைவில் மாற்றம் 0

🕔24.May 2016

மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் மிக விரைவில் மாற்றம் ஏற்படும் என்று அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள மாகாண சபைகளிலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேற்று நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்

மேலும்...
பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்; 130 பேர் இடம்பெயர்வு

பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்; 130 பேர் இடம்பெயர்வு 0

🕔23.May 2016

– க. கிஷாந்தன் – பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக 29 குடும்பங்களை சேர்ந்த 130 பேர்  தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் தற்பொழுது தோட்டத்திலுள்ள கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நிவாரண உதவிகள் தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது. இத்தோட்டத்தில் 06,

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது

தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது 0

🕔23.May 2016

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மூன்றாவது தடவையாக இன்று விசாரணைக்குச் சென்றிருந்த நிலையில், இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்