மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் விரைவில் மாற்றம்

🕔 May 24, 2016

Duminda dissanayake - 01மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் மிக விரைவில் மாற்றம் ஏற்படும் என்று அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள மாகாண சபைகளிலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேற்று நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகள் ஒரு சில நாட்களுக்குள் மாற்றம் செய்யப்படும்.

ஜனாதிபதியின் அரசியல் செயற்திட்டங்களுக்கு உதவாத, அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கும் நபர்கள் – இதன்போது அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.

அத்துடன் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக செயற்படாதவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்காது” எனக் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்